ஒரு சில உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் எதிர்நோக்கப்படும் நிதியியல் பிரச்சனைகள் தொடர்பில் கரிசனைகளை ஏற்படுத்துகின்ற விதத்தில் ஒரு சில செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட சில குறிப்பிட்ட தவறான செய்திகளை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. ஆகவே பொதுமக்களின் நலன்கருதி அத்தகைய செய்திகளின் துல்லியமற்ற தன்மைக்குப் பின்னாலுள்ள உண்மைகளை தெளிவுபடுத்த மத்திய வங்கி விரும்புகின்றது.
- இக்கம்பனிகள், தற்போது நிலவுகின்ற சட்டங்களின் கீழ், மத்திய வங்கியின் குறித்துரைக்கப்பட்ட மேற்பார்வையுடன் அவற்றின் வியாபாரங்களை மீளமைத்து வருகின்றன. இக்கம்பனிகளின் பிரச்சனைகள் இவை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றவாறு புதியனவல்ல. அவை 2008ஆம் ஆண்டு தொடக்கம் இருந்துவருபவையாகும். சில கம்பனிகளுக்கு மத்திய வங்கி வெற்றிகரமாக புத்துயிரளிக்கக் கூடியதாக இருந்த வேளையில், சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் கடன்பாட்டாளர்களின் ஒத்துழைப்பின்மை என்பனவற்றின் காரணமாக இக்கம்பனிகளினால் வழங்கப்பட்ட சில பாரிய கடன்களை அறவிட முடியாமல் இருப்பதன் காரணமாக ஒரு சில மற்றைய கம்பனிகள் புத்தியிரளிக்கின்ற செயன்முறையின் பல்வேறு கட்டங்களின் கீழ் தொடர்ந்தும் இருநது; வருகின்றன.
- மத்திய வங்கி இக்கம்பனிகளுக்கு புத்துயிரளிப்பது தொடர்பில் உயர்ந்த முன்னுரிமையினை வழங்கி வருகின்றது. இது தொடர்பிலான அண்மைய முயற்சியானது, இக்கம்பனிகளின் நிதியியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான புதிய கொள்கையொன்றினை நடைமுறைப்படுத்துவது பற்றிய அரசாங்கம், மத்திய வங்கி மற்றும் நிதி அக அமைப்பு என்பனவற்றின் கூட்டு நடவடிக்கையினை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. 2016இன் அரச வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு, கிழக்காசிய நாடுகளினால் பின்பற்றப்படுகின்ற மாதிரிகள் போன்றவற்றுடன் இசைந்து செல்லத்தக்க விதத்தில் அரச ஆதரவுடன், இக்கம்பனிகள் அவற்றின் செயற்படாக் கடன்களை அறவிட்டுக் கொள்ளவும் முகாமைப்படுத்தவும் அவற்றிற்கு உதவும் விதத்தில் நிதியியல் சொத்து முகாமைத்துவக் கம்பனியொன்று வருங் காலத்தில் ஏற்படுத்தப்படும். வங்கித்தொழில் அல்லாத நிதியியல் துறை முழுவதையும் பாதுகாத்து மேம்படுத்தும் ஈடுபாட்டுடன் இக்கம்பனிகளின் வியாபாரத் தொழிற்பாடுகளுக்கு நிதியிடல் ஆதரவினை வழங்குவதறகு; முன்னணி நிதியியல் கம்பனிகளையும் அவற்றின் முதலீட்டாளர்களையும் ஒழுங்குசெய்வதன் மூலம் உதவியளிப்பதற்கு நிதிஅக அமைப்பு முன்மொழிந்திருக்கிறது. மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் வசதிகளை வழங்குவதுடன் முதலீட்டாளர்களிடமிருந்து புதிய மூலதனங்களை உள்ளீடு செய்யும் ஒழுங்குகளையும் மேற்கொள்ளும். இதுபற்றி வெளிநாடுகளிலுள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான முதலீட்டாளர்கள் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
- மத்திய வங்கி புதிய உரிமங்கள் எதனையும் வழங்குவதில்லை என்பதனை கொள்கையாகக் கொண்டிருப்பதன் காரணமாக, ஏற்கனவேயுள்ள கம்பனிகளின் உரிமங்கள் எதிர்காலத்தில் மிக உயர்நத் சநi;தப் பெறுமதியினைக் கொண்டிருக்குமென்ற விடயம் புதிய முதலீடட்hளர்களை ஊக்குவிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. துறை முழுவதினதும் பாதுகாப்பினையும் ஆற்றல் வாய்ந்த தன்மையினையும் பலப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் முக்கிய சீர்ப்படுத்தல் இச்செயன்முறையில் இன்றியமையாத கூறொன்றாக விளங்குகின்றது.
- இக்கம்பனிகளின் நிதியியல் பிரச்சனைகளை விரைநது; கட்டுப்படுத்துவதற்கு அவசியமான அனைதது; வழிமுறைகளையும் எடுக்கும் விதத்தில் 'புதிய தீர்மானப் பிரிவு" ஒன்றினை மத்திய வங்கி தறn;பாழுது உருவாக்கியுள்ளது. இச்சிறப்பியல்பு வாய்ந்த பிரிவு, விரைந்த அடிப்படையில் தேவையான கொள்கை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாணயச் சபைக்கு உதவும். மேற்குறிப்பிட்ட கூடடு; முயற்சியுடன் இணைந்து செல்லும் விதத்தில் இனிவரும் காலத்தில் புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். வரலாற்றினை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளுக்கும் பதிலாக, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் வியாபாரம் தொடர்பான எதிர்கால உறுதிப்பாட்டிற்கு ஏற்படக்கூடிய பொருண்மிய இடர்நேர்வுகளை முக்கிய கவனத்தில் கொண்டு அவற்றின் நிதியியல் நிலைமைகளையும் வியாபார மாதிரிகளையும் மதிப்பிடும் விதத்தில் பரீட்சிப்புக்களும் மேற்பார்வை முறையியல்களும் ஏற்கனவே திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றன. இப்பின்னணியில், அத்தகைய இடர்நேர்வுகள் தொடர்பில் மேற்பார்வைக் கரிசனைகள் பற்றிய தீர்மானங்களை நேரகாலத்துடன் எடுபப்து உரிய பணிப்பாளர் சபையின் நேரடிப் பொறுப்பாக இருக்கும்.
- மத்திய வங்கியின் இரண்டு நியதிக் குறிக்கோள்களிலொன்றாக இருக்கும் நாட்டின் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு பெரும் எண்ணிக்கையான சட்ட ரீதியான அதிகாரங்களின் மூலம் ஆதரவளிக்கப்படுவதுடன், அதன் காரணமாக மத்திய வங்கி நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினைப் பாதிக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளையும் தொடர்ந்தும் தீர்த்து வருகின்றது. எனினும், மத்திய வங்கியினால் மட்டும் தனித்து இதனைத் தீர்க்க முடியாதென்பதனால் மற்றைய ஆர்வலர்களினதும் உதவியும் அவசியமானதாக காணப்படுகின்றது.
- இக்கம்பனிகளின் முகாமைத்துவத்தினை பொறுப்பேற்பதற்கு ஆர்வம் கொண்டுள்ள அல்லது பெரும் எண்ணிக்கையான கடன்களைச் செலுத்தாமல் இருந்து கொண்டு அக்கடன்களின் அறவிடலைத் தடுக்கின்றதொரு தரப்பினரே அவர்களது தனிப்பட்ட மற்றும் வியாபார நலன்களுக்காக வைப்பாளர்களின் நலவுரித்துக்களை அழித்துவிடும் விதத்தில் அத்தகைய பிழையான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்பதனை மத்திய வங்கி அறியும். உண்மையில், இத்தரப்பினரே தற்போதைய நிதியியல் பிரச்சனைகளுக்கு வழிவகுத்த இக்கம்பனிகளின் கடந்த கால நிதிகளின் பிழையான முகாமைத்துவத்திற்கு நேரடியாகப் பொறுப்புடையவர்களாவர். தேசிய செய்தித் தாள்களில் வெளிவரும் இத்தகைய பிழையான தகவல்கள் நிதியியல் முறைமையில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையினைப் பாதிக்கும் சந்தர்ப்பங்களில் இவை நிதியியல் முறைமை உறுதிப்பாட்டில் தேவையற்ற அழுத்தங்களுக்கு காரணமாகலாம் என்பதனால் அச்செய்திகளின் பெறுமானத்தினையும் நம்பகத்தன்மையினையும் பரீட்சித்துப் பார்க்காமல் அவற்றை தேசிய செய்தித் தாள்கள் வெளியிடுகின்றமை பற்றி மத்திய வங்கி கரிசனைகளைக் கொண்டிருக்கிறது. ஏதேனும் விடயம் பற்றிய இரகசியமான பிரச்சனைகள் முழு நிதியியல் முறைமைகளிடையேயும் மிக இலகுவாக பரவிவிடக் கூடுமாகையால் இது முழு நாட்டின் மீதும் மோசமான தாக்கமொன்றினைக் ஏற்படுத்தக்கூடும். எனவே, மத்திய வங்கி, அத்தகைய செய்தித் தாள்களின் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் உணர்வுபூர்வமான இவ்விடயத்துடன் சேர்ந்திருக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கூடுதலானளவு கரிசனைகளுடன் அவர்கள் இருபப்தனை ஊக்குவிக்கவும் எதிர்பார்க்கிறது.
- ஆகவே, அனைத்து ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களினதும் வைப்பாளர்களும் மற்றைய ஆர்வலர்களும் அத்தகைய பிழையாக வழிநடத்தக்கூடிய. தகவல்கள் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும் அவர்களது நலவுரித்துக்கள் தொடர்பில் இக்கம்பனிகளின் வியாபார தொழிற்பாடுகளை உயர்த்தவும் அக்கம்பனிகளுடனும் மத்திய வங்கியுடனும் ஒத்துழைக்கும்படியும் ஆலோசனை வழங்கப்படுகிறது. எனவே, அத்தகைய பிழையான அறிக்கைகளிலிருந்து தோன்றக்கூடிய கரிசனைகள் பற்றி பொதுமக்கள் கவலைப்படுவதற்கு எவ்வித காரணங்களுமில்லை.
Published Date:
Friday, September 9, 2016