விரிந்த பண நிரம்பலானது ஆண்டிற்காண்டு (M2b) அடிப்படையில் முன்னைய மாதத்தில் காணப்பட்ட 17.00 சதவீதம் கொண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து 2015 நவெம்பரில் 17.2 சதவீதம் கொண்ட உயர்நத் வீதத்தில் விரிவடைந்தது. 2015 நவெம்பரில் வங்கித் தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2015 ஒத்தோபர் 27ஆம் நாள் வெளியிடப்பட்ட ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகள் பெறப்பட்டதுடன் மேம்பட்டன. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலும் நவெம்பர் மாதத்தில் வங்கித் தொழில் துறையிலிருந்து அரசினால் பெறப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட குறைப்பிற்கு வசதியளித்த வேளையில் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களினால் பெறப்பட்ட கொடுகடனும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில், வர்த்தக வங்கிகளினால் தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட கொடுகடன் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்து ஒத்தோபரின் 26.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2015 நவெம்பரில் 27.0 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்டதொரு அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. உண்மையான நியதிகளில், தனியார் துறைக் கொடுகடனில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பு ரூ.