யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மத்திய வங்கியின் பிரதேச உப அலுவலகம் அதன் தொழிற்பாடுகளை 2017 யூன்15 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துளள் பிரதேச அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது என்பதனை பொது மக்களுக்கு இத்தால் அறிவிக்கபப் டுகிறது. இதன்படி, ஊழியர் சேம நிதியத்துடன் தொடர்பான பணிகளை வழங்குதல், இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளுக்கான விற்பனைப் பீடத்தினை பேணுதல், நிதியியல், முகாமைத்துவ மற்றும் வியாபாரத்திறன்களின் அபிவிருத்தி போனற் வற்றின் மீதான விழிப்புணர்வுகளை நடத்துதல், யாழ்ப்பாண பிராந்தியத்தின் கொடுகடன் விநியோகப் பொறிமுறையினை மேம்படுத்துதல் போன்ற யாழ் உப அலுவலகத்தினால் வழங்கப்படட் பணிகள் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தின் தற்போதைய அதன் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும்.
Wednesday, June 28, 2017