தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 ஏப்பிறலில் 8.4 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பிற்கு மத்தியிலும் தளத்தாக்கமே முக்கிய காரணமாக விளங்கியது. 2017 மேயில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட 6.0 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 6.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
மாதாந்த மாற்றத்தினைக் பரிசீலனையில் கொள்ளும்போது, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2017 ஏப்பிறலில் 121.0 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 மேயில் 121.8 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்பிற்கு உணவு வகையில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். இம்மாத காலத்தில் உணவு வகையில், காய்கறிகள், சின்னவெங்காயம், உடன்மீன், அரிசி மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலைகள் அதிகரித்தன. உணவல்லா வகையில், ஆடை மற்றும் காலணி; வீடமைப்பு, நீர்; மின்வலு, வாயு, ஏனைய எரிபொருள் (பொருட்கள் மற்றும் பேணல்; தளபாடங்கள், வீட்டலகுச் சாதனங்கள் வழமையான வீட்டு பேணல்; போக்குவரத்து (டயர், டியூப், உதிரிப்பாகங்கள் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்) பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணை வகையின் விலைகள் அதிகரித்தன. சுகாதாரம், கல்வி மற்றும் சிற்றூண்டிச்சாலை மற்றும் சுற்றுலாவிடுதி துணைத் துறைகளும் சிறிதளவு அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலைத;துணை வகைகளிலுள்ள சிலவிடயங்களின் விலைகள் 2017 மேயில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை தொடர்பூட்டல், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார துணை வகைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றியிருந்தன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் ஆண்டிறகு; ஆண்டு அடிப்படையில் 2017 ஏப்பிறல் 5.9 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 4.7 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு ஒப்பீட்டு ரீதியில் தாழ்நத் மாதாந்த அதிகரிப்பும் தளத் தாக்கமும் காரணமாகும். வருடாந்த சராசரி தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் மையப்பணவீக்கம் 2017 ஏப்பிறலில் 6.6 சதவீதத்திலிருந்து 2017 மேயில் 6.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.