தற்பொழுது நிலவுகின்ற மற்றும் தோற்றம் பெறும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்ட பொருளாதாரச் சூழல்களைப் பரிசீலனையில் கொண்ட நாணயச் சபை 2017 யூன் 22ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டத்தில் பேணுவதெனவும் தீர்மானித்தது.
நாணயச் சபையின் தீர்மானமானது, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் பேணுதல் அதன் மூலம் நீடித்த வளர்ச்சி உத்வேகத்திற்கு வசதிப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்த நியாயப்பாடு கீழே வழங்கப்படுகின்றது.
Published Date:
Friday, June 23, 2017