Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தை அனுசரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட தகைமையுடைய திறைசேரி முறிகளை பன்னிரண்டு (12) புதிய கிரமமாகக் குறைவடையும் (Step-Down) கூப்பன் திறைசேரி முறிகளுக்கான பரிமாற்றுத் தீர்ப்பனவு

2023 யூலை 04ஆம் திகதியிடப்பட்ட திறைசேரி முறி பரிமாற்ற விஞ்ஞாபனமானது (“பரிமாற்ற விஞ்ஞாபனம்), அதனைத்தொடர்ந்து, 2023 செத்தெம்பர் 12 அன்று திறைசேரி முறிகளைப் பரிமாற்றுவதற்கான அழைப்பின் பெறுபேறுகள் பற்றிய அறிவித்தல்களுடன் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டது. (இதில் பயன்படுத்தப்பட்ட ஆனால் வேறுவகையில் வரைவிலக்கணம் செய்யப்படாத சொற்பதங்கள் பரிமாற்று விஞ்ஞாபனத்திலுள்ள அத்தகைய சொற்களுக்கு வழங்கப்பட்ட பொருளைக் கொண்டுள்ளன).

அதற்கமைய, குடியரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த செல்லுபடியான முன்வைப்புகளுக்கான வெளிநின்ற தகைமையுடைய முறிகள், பன்னிரண்டு (12) புதிய கிரமமாகக் குறைவடையும் (ளுவநி-னுழறn) நிலையான கூப்பன்ழூ திறைசேரி முறிகளாக விலைஈட்டு விகிதத்திற்கு பரிமாற்றுவதைத் தொடர்புபடுத்தி மாற்றம்செய்யப்பட்டன.

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பங்குபற்றுதல்

ஊழியர் சேமலாப நிதியம், ஒரு தகைமையுடைய பங்கேற்பாளர் என்றவகையிலும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அங்கீகாரத்துடனும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானமொன்றினைத் தொடர்ந்து நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சினால் (நிதி அமைச்சு) ஆக்கப்பட்ட அழைப்பின் நியதிகளின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியமானது உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியத்தின் திறைசேரி முறிகள் சொத்துப்பட்டியலினை பரிமாற்றுவதற்கான விருப்பறிவிப்பை சமர்ப்பித்துள்ளதென நிதியத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது. அதற்கமைய பின்வருவன உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன.

பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான இரண்டாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு வெளியிடுகிறது

அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதி நிதியளித்தல் தொடர்பான 2021/2022ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கை வெளியிட்டது. இம்மதிப்பீடானது நாட்டிலுள்ள பணம் தூயதாக்கல்ஃபயங்கரவாதிக்கு நிதியளித்தல் இடர்நேர்வுகளை இனங்காண்பதை இலக்காகக் கொண்டது. இலங்கை எதிர்கொண்ட மிகவும் குறிப்பிடத்தக்க பணம் தூயதாக்கல்/பயங்கரவாதிக்கு நிதியளித்தல் அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் இடர்நேர்வுகளை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது. 

பிம்புத் பினான்ஸ் பிஎல்சி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் ஒட்டுமொத்த குறிக்கோளையும் அடையும் நோக்குடன் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் அத்துடன் கம்பனியின் நெருக்கடியான  நிதியியல் நிலைமையைத் தீர்க்கும் பொருட்டு பிம்புத் பினான்ஸ் பிஎல்சிக்கு விடுக்கப்பட்ட குறிப்பான பணிப்புரைகளையும் தொடர்ச்சியாக மீறி வருகின்றதுஃ முரணாக இயங்கியுள்ளது. இதன்விளைவாக, பற்றாக்குறையான மூலதன மட்டம், மோசமான சொத்துத் தரம், மற்றும் தொடர்ச்சியான இழப்புக்கள் என்பவற்றின் காரணமாக பிம்புத் பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் சீர்குலைந்துள்ளன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2023 ஓகத்தில் மேலும் மெதுவடைவொன்றை எதிர்கொண்டது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 யூலையின் 6.3 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 4.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 யூலையில் எதிர்பார்க்கப்பட்ட எறிவுகளிற்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவு வகையானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூலையின் 1.4 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்கும் 4.8 சதவீதத்தைப்  பதிவுசெய்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூலையின் 10.5 சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 8.7 சதவீதத்திற்கு மேலும் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 ஓகத்தில் -0.02 சதவீதத்தைப் பதிவுசெய்தமைக்கு, உணவு வகைகளில் அவதானிக்கப்பட்ட  -0.41 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளின் ஒன்றிணைந்த விளைவும் உணவல்லா வகையில் பதிவுசெய்யப்பட்ட 0.39 சதவீதம் கொண்ட விலை அதிகரிப்புக்களும் காரணமாக அமைந்தன. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 யூலையின் 5.9* சதவீதத்திலிருந்து 2023 ஓகத்தில் 4.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொள்கை வழிமுறைகளினதும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகளினதும் விளைவொன்றாக, பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டங்களை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 யூலை

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 யூலையுடன் ஒப்பிடுகையில் 2023 யூலையில் ஒப்பீட்டளவில் தாழ்ந்தளவிலான ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் உயர்ந்தளவிலான இறக்குமதிச் செலவினம் என்பவற்றின் இணைந்த தாக்கத்தின் காரணமாக விரிவடைந்தது. இருப்பினும், 2023 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 2022இன் தொடர்புடைய காலப்பகுதியிலும் பார்க்க மிகவும் தாழ்ந்தளவில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்து காணப்பட்டதுடன் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2023 யூலையில் முன்னைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் மேம்பட்டுக் காணப்பட்டன.

2023 யூலை மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பிடத்தக்களவிலான தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தபோதிலும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது.

மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டமானது 2023 யூலை இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.8 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டது.

2023 யூலையில் இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலரிற்கெதிராக ஓரளவு தளம்பல்தன்மையினைக் கொண்டிருந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்