Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" மற்றும் 'இலங்கையின் சமூக – பொருளாதாரத் தரவுகள் - 2016" ஆகிய வெளியீடுகள் வெளியிடப்பட்டுள்ளன

'இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியானதொரு வழிகாட்டல்" நூலின் ஆறாவது பதிப்பு இலங்கை மத்திய வங்கியினால் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வெளியீடானது, இலங்கையில் வியாபாரத் தொழில்முயற்சிகளைத் தொடங்குதல், தொழிற்படுத்தல் மற்றும் மூடிவிடுதல் தொடர்பில் பயன்மிக்க ஒழுங்குமுறைப்படுத்தல் தகவல்களைக் கொண்டிருக்கின்றது. தொடர்பான நிறுவனங்களினால் முன்மொழியப்பட்டவாறு, 2016இன் முதற்காலாண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அவசியமான திருத்தங்கள் இவ்வெளியீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது, வியாபார சமுகத்தினருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் ஒரே இடத்தில் அனைத்துத் தகவல்களையும் கொண்ட பயன்மிக்க ஆவணக் கருவூலமாக விளங்குவதுடன் தேடல் செலவுகள், நேரம் மற்றும் அத்தகைய தகவலக் ளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள வசதியீனங்கள் என்பனவற்றைக் குறைப்பதன் மூலம் உதவிபுரிகிறது.

நிதிக் கம்பனிகள் மீதான தீர்மான வழிமுறைகளை மத்திய வங்கி மேலும் வலுப்படுத்துகிறது

ஒரு சில உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளினால் எதிர்நோக்கப்படும் நிதியியல் பிரச்சனைகள் தொடர்பில் கரிசனைகளை ஏற்படுத்துகின்ற விதத்தில் ஒரு சில செய்தித் தாள்களில் வெளியிடப்பட்ட சில குறிப்பிட்ட தவறான செய்திகளை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. ஆகவே பொதுமக்களின் நலன்கருதி அத்தகைய செய்திகளின் துல்லியமற்ற தன்மைக்குப் பின்னாலுள்ள உண்மைகளை தெளிவுபடுத்த மத்திய வங்கி விரும்புகின்றது. 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2016 யூன்

விரிவடைந்துவரும் வர்த்தகப் பற்றாக்குறை, தொழிலாளர் பணவனுப்பல்களிலும் சுற்றுலா வருவாய்களிலும் காணப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் குறைந்த வளர்ச்சி என்பனவற்றின் காரணமாக 2016 யூனில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயலாற்றம் தொடர்ந்தும் மிதமான தன்மையினைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் படிப்படியான முன்னேற்றத்தினைக் காட்டிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டினதும் நலிவடைந்த செயலாற்றத்தின் காரணமாக மேயிலும் யூனிலும் மோசமடைந்தது. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் ஆண்டின் மற்றைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் யூனில் குறைந்த வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளையில் தொழிலாளர் பணவனுப்பல்களின் வளர்ச்சியும் மிதமானதாகவே காணப்பட்டது.

2016 யூலையில் பணவீக்கம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் (2013=100) அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2015 யூனின் 6.4 சதவீதத்திலிருந்து 2016 யூலை 5.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 2016 யூலையில் உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்துள்ளன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2016 யூனில் 3.1 சதவீதத்திலிருந்து 2016 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

Pages