கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 மேயில் 59.7 சதவீதமாக மீளெழுச்சியடைந்தது. ஏப்பிறலின் பண்டிகை பருவ கால மந்தநிலையிலிருந்து மீண்டு கட்டடவாக்க நடவடிக்கைகள் மேயில் மீண்டும் உத்வேகம் பெற்றுள்ளன என அநேகமான பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
















