Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி தொடர்பில் 2018.03.05 அன்று விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கான தெளிவுபடுத்தல்

இலங்கை மத்திய வங்கி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு வழங்கப்பட்ட உரிமத்தினையும் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழையும் இரத்துச் செய்வது தொடர்பில் 2018.03.05 அன்று விடுத்த பத்திரிகை அறிவித்தல் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க விரும்புகின்றது. 2017.12.05 அன்று விடுக்கப்பட்ட எமது பத்திரிகை வெளியீட்டின் மூலம்  பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டவாறு, சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இன் காப்புறுதி செய்யப்பட்ட அனைத்து வைப்புக்களுக்கும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதியின் கீழ் வைப்பாளரொருவருக்கு உயர்ந்தபட்சம் ரூ.600,000 செலுத்தப்படும்.

சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இற்கு 2011ஆம் ஆண்டு 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினையும் 2000ஆண்டின் 56ஆம் இலக்க நிதியியல் குத்தகைக்குவிடல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழினையும் இரத்துச் செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற நிதியியல் கம்பனியான சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சியானது தவறான முகாமைத்துவம் மற்றும் கம்பனியில் இடம்பெற்ற பல்வேறு மோசடியான நடவடிக்கைகள் காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக கடுமையான நிதியியல் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. கம்பனியின் வைப்பாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமது பணத்தினை மீளப்பெறுவதற்கு முடியாமலிருக்கின்றனர். பல்வேறு உபாயங்களினூடாக கம்பனியினை மீளெழுச்சி பெறச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. தற்போதைய நிலைமைகளைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் மேலும்  தீங்கிழைப்பதாக அமையும்.

எதிர்கால வட்டி வீத அசைவுகள் தொடர்பில் தவறாக வழிநடத்துகின்ற செய்தி அறிக்கைகளுக்கு மத்திய வங்கியின் பதிலிறுப்பு

எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய வங்கி உள்நாட்டு வட்டி வீதங்களில் உயர்வினை எதிர்பார்க்கின்றது எனத் தெரிவிக்கின்ற அண்மைய ஒரு சில ஊடக அறிக்கைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி அதன் கவனத்தினைச் செலுத்தியிருக்கிறது. அத்தகைய எதிர்பார்ப்பிற்காக குறிப்பிட்ட அறிக்கைகள் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க உயர்வாகக் காணப்பட்ட இறக்குமதிகள் மற்றும் அரச பிணையங்கள் மீதான அதிகரித்த வட்டி வீதங்கள் என்பனவற்றை காரணங்களாக எடுத்துக்காட்டியிருக்கின்றன.

இலங்கை மத்திய வங்கி அதன் தற்போதைய எறிவுகளின் அடிப்படையில், சந்தை வட்டி வீதங்களில் அண்மைக் காலத்தில் அதிகரிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்பதனை வலியுறுத்துகிறது. முதன்மைப் பணவீக்கம், மையப் பணவீக்கம், பணவீக்க எதிர்பார்ப்புக்கள், விரிந்த பணத்தின் வளர்ச்சி, கொடுகடன் விரிவாக்கம், பொருளாதார நடவடிக்கைகளின் விரிவாக்கம் அதேபோன்று பன்னாட்டு ஒதுக்கு நிலைமை என்பன வட்டி வீதங்களில் அதிகரிப்பொன்றினை எதிர்பார்ப்பதற்கான பகுத்தறிவுச் சந்தையொன்றினை நியாயப்படுத்துவனவாக இருக்காது.

காணி விலைச் சுட்டெண் - 2017இன் இரண்டாம் அரையாண்டு

உண்மைச் சொத்துத் துறையின் அபிவிருத்திகளை கண்காணிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியானது பல குறிகாட்டிகளை தொகுத்து பகுப்பாய்வு செய்கின்றது. இதற்கிணங்க, 1998 முதல் கொழும்பு மாவட்டத்தினை உள்ளடக்கி காணி விலைச் சுட்டெண் அரையாண்டுகளுக்கொரு தடவை தொகுக்கப்படுகிறது. காணி விலைச் சுட்டெண் தொகுக்கும் செயன்முறையில், இலங்கை மத்திய வங்கியானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளின்1 சுமார் 50 நிலையங்களை உள்ளடக்கி இலங்கை விலை மதிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும் காணி விலைத் தரவுகளைப் பயன்படுத்துகின்றது. காணிப் பல்வகைப் பயன்பாட்டுத்தன்மை நோக்கிலும் ஒரேசீர்மை அமைப்பினைப் பேணுவதற்கும் வதிவிட, வர்த்தக ரீதியான மற்றும் கைத்தொழில் காணிகளுக்காக மூன்று சுட்டெண்கள் வௌ;வேறாகக் கணிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று துணைச் சுட்டெண்களினதும் சராசரியினைக் கருத்திற்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த காணி விலைச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2017 திசெம்பர்

இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது பிரதானமாக சென்மதி நிலுவை நிதியியல் கணக்குகளுக்கான உயர்வான உட்பாய்ச்சல்களுடன் 2017 திசெம்பரில் தொடர்ந்தும் மேம்பட்டது. 2017 திசெம்பரில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் உயர்வீதமொன்றில் அதிகரித்த போதிலும், இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதனை தோற்றுவித்தது. எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வருவாய்கள் வாயிலாக ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள், விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவினைக் குறித்த மட்டமொன்றில் கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்தன. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன உட்பாய்ச்சல்கள், மாதத்தின் போது தொடர்ந்தும் மேம்பட்டன. வெளிநாட்டுத் துறையில் சாதகமான அபிவிருத்திகளை பிரதிபலிக்கின்ற விதத்தில் 2017இல் சென்மதி நிலுவை ஐ.அ.டொலர் 2,068 மில்லியன் கொண்ட மிகையொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை, நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2017இன் இறுதியில் ஐ.அ.டொலர் 8.0 பில்லியனாகவிருந்தது. அதேவேளை, 2017இன் போது இலங்கை ரூபா.2.0 சதவீதத்தினால் பெறுமானத் தேய்வடைந்தது.

முழுவடிவம்

2018 சனவரியில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 திசெம்பரின் 7.3 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு, 2017 சனவரியில் நிலவிய உயர்ந்த தளமும் அதேபோன்று 2018 சனவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 திசெம்பரின் 7.7 சதவீதத்திலிருந்து 2018 சனவரியில் 7.6 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்