Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

பணம் அச்சிடுதல் தொடர்பான தவறான செய்திக் கட்டுரைகள்

கடந்த சில நாட்களாக இலங்கை மத்திய வங்கி மூலமான அதிகரித்த பணம் அச்சிடுதல் தொடர்பான அண்மைய செய்திக் கட்டுரைகள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் ஈர்க்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியானது அத்தகைய கட்டுரைகளின் எண்ணக்கருக்களும் உண்மைகளும் ஒட்டுமொத்தமாக பிழையானதாகவும் தவறாக வழிநடாத்துவதாகவும் காணப்படுவதனால் பின்வரும் தெளிவுபடுத்தலினை வழங்கவிரும்புகின்றோம்.

''இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்" வெளியீடு

'வியாபாரமொன்றினை ஆரம்பித்தல்', 'வியாபாரம் செய்கின்ற போது' மற்றும் 'ஏனைய நடவடிக்கைகள்' ஆகிய மூன்று பிரதான அத்தியாயங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் “இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்" என்ற நூல் வர்த்தக சமூகம், வாய்ப்பு மிக்க தொழில்முயற்சியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு முகவராண்மைகள் போன்றவற்றுக்கு பயன்மிக்க தகவல்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் தொடர்புடைய நிறுவனங்கள், ஆவணத் தேவைப்பாடுகள், ஒழுங்குமுறைப்படுத்தல் இசைவுகள் மற்றும் இணையப்பெற்ற செலவுகள் தொடர்பான அனைத்தினையும் உள்ளடக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனன. 2018 நடுப்பகுதிவரை தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அவசியமான திருத்தங்கள் இப்பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி – 2017

மாகாண ரீதியான குறிகாட்டிகளைப் பயன்படுத்தி தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஆண்டுக்கான பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தித் எண் தொகைகளைப் பிரிப்பதன் மூலம் இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் மதிப்பிடப்பட்ட மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தியானது நாட்டின் பெயரளவிலான மொ.உ. உற்பத்தியின் பாரியளவிலான பங்கிற்கு மேல் மாகாணம் தொடர்ந்தும் வகை கூறியது என்பதனைக் காண்பிக்கின்றது. எவ்வாறாயினும், அண்மைக்காலப் போக்குகளுக்கமைய மொ.உ.உற்பத்தியில் அதன் பங்கு வீழ்ச்சியடைந்து  2017இல் பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் குறுக்கமடைவதற்கு பங்களிப்புச் செய்தது. மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் பெயரளவிலான நியதிகளில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிகூடிய பங்களிப்புச் செய்வதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகித்தன.

2017 காலப்பகுதியின் போது, கிழக்கு, வட மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாண மொ.உ. உற்பத்திப் பங்கில் அதிகரிப்புக்களை அவதானிக்கக்கூடியதாகவிருந்த அதேவேளை மேல், தென், வட மத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் குறைவடைந்தது. மத்திய மற்றும் வட மாகாணங்களின் பங்குகள் மாறாதிருந்தன.

இலங்கை அரசாங்கத்தின் நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கல்கள்

இலங்கை அரசாங்கமானது 2007 தொடக்கம் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்கிவருகின்றது. இலங்கை அரசாங்கம் சுதந்திரம் பெற்றது முதல் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் உள்ளடங்கலாக அதன் படுகடன் கடப்பாடுகளை உரிய காலத்தில் தீர்ப்பனவு செய்வதன் மீது மாசற்ற பதிவொன்றினைப் பேணி வந்துள்ளது.

2014 சனவரி மற்றும் ஏப்பிறல் மாதங்களில் வழங்கப்பட்ட முறையே ஐ.அ.டொலர் 1,000 மில்லியன் மற்றும் 500 மில்லியன் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் 2019 சனவரி மற்றும் ஏப்பிறல் மாதங்களில் முதிர்ச்சிபெறவுள்ளன. இலங்கை அரசாங்கமானது உபாயமற்ற சொத்துகளின் உரிமை மாற்றல் பெறுகைகள் ஊடாகவும் கூட்டு ஏற்பாடுகள் மூலம் நிதியளித்தல் ஊடாகவும் 2019இல் முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான முன்நிதியளித்தல் ஒழுங்குகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2018இன் முக்கிய பண்புகளும் 2019இற்கான வாய்ப்புக்களும்

இலங்கை மத்திய வங்கி அதனது அரையாண்டு வெளியீடான – “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2018இன் முக்கிய பண்புகளும் 2019இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. 

2018இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் இவ்வெளியீட்டில் வெளிக்காட்டப்பட்டவாறு கீழே தரப்பட்டுள்ளது: 

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 ஓகத்து

2018 ஓகத்தில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் குறைந்தளவில் காணப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, ஏற்றுமதி வருமானமானது இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக ஓராண்டிற்கு முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறுக்கமடைந்து காணப்பட்டது. அதேவேளை, நடைமுறைக் கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் சுற்றுலா மற்றும் சுற்றுலாவிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பு, தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2018 ஓகத்தில் தொடர்ந்தும் மிதமானதாகவே காணப்பட்டது. தேறிய அடிப்படையில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு இம்மாத காலப்பகுதியில் வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தமைக்கு அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டிலுமிருந்து வெளிநாட்டு முதலீடுகள் எடுப்பனவு செய்யப்பட்டமையும் தொடர்ச்சியான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுமே காரணங்களாக அமைந்தன. இவ்வபிவிருத்திகள் ஐ.அ.டொலரின் பரந்த அடிப்படையிலான வலுப்படுத்தல்களுடன் சேர்ந்து செலாவணி வீதம் வீழ்ச்சியடைவதற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை ஏற்படுத்தின.

Pages

சந்தை அறிவிப்புகள்