Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தடயவியல் கணக்காய்வுகள்

மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வுகள் தொடர்பில் பல தவறான அறிக்கையிடல்கள் இடம்பெற்றுள்ளதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள விரும்புகின்றது:-

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 நவெம்பர்

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 2019 நவெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சிறிதளவில் சுருக்கமடைந்தது. 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்படட சிறிதளவு அதிகரிப்புடன் இறக்குமதிகள் மீதான செலவினத்தல் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி சேர்ந்த கொண்டமையின் விளைவாக, 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019 நவெம்பரில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், சுற்றுலா வருகைகள் வீழ்ச்சியடைந்த போதும், சுற்றுலாத் தொழில் துறையில் தொடர்ச்சியான மீட்சி அவதானிக்கப்பட்டிருக்கிறது. 2019 நவெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்து 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. அதேவேளை, சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது பிரிவின் பெறுகைகள் மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் பெறுகைகள் என்பனவற்றுடன் பெருமளவிற்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 திசெம்பர்

2019 திசெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும், 2019 நவெம்பருடன் ஒப்பிடுகையில் இன்னமும் மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவை தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறையின் மெதுவான தன்மையே காரணமாகும். தொழில்நிலையில், குறிப்பாக அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்களவு மெதுவான போக்கு காணப்பட்டமைக்குச் சாத்தியமான ஊழியர்கள் சிறந்த ஊதியங்களுக்காக பருவகாலத் தொழில்வாய்ப்புக்களுக்கு அவர்கள் கவரப்பட்டமையே காரணமாகும். தொழில்நிலையில் காணப்பட்ட மெதுவான போக்கு உற்பத்திக் குறைப்பில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தியது. 

 

வழிகாட்டல் 2020 - 2020 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

இன்று, இலங்கையின் பொருளாதாரம் முக்கியமானதொரு காலகட்டத்தில் காணப்படுகிறது. இறைமையுடைய நாடென்ற ரீதியில் தசாப்த காலங்களாக வகுக்கப்பட்ட கொள்கை வழிமுறைகள் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும் முன்னேற்றியிருக்கின்றன. இருப்பினும் கூட, கடுமையான சவால்களாக - சராசரிக்கும் குறைவான வளர்ச்சி, ஆங்காங்கே காணப்படும் விடாப்பிடியான வறுமை, உற்பத்தியாக்க மூலவளங்கள் குறைந்தளவில் பயன்படுத்தப்படுகின்றமை, ஏற்றுமதிகள் போதுமானளவில் விரிவடையாமை மற்றும் பன்முகப்படுத்தப்படாமை, படுகடனை உருவாக்காத மூலதன உட்பாய்ச்சல்களில் காணப்படும் பற்றாக்குறை, பாரிய கொடுகடன் மற்றும் வட்டி வீத சுழற்சி வட்டம் மற்றும் உயர் இறைப் பற்றாக்குறைகள் மற்றும் பொதுப்படுகடன் மட்டங்கள் என்பன தொடர்ந்தும் காணப்படுகின்றன. கொள்கை சார்ந்த அதேபோன்று கொள்கை சாராக் காரணிகளின் விளைவாக ஏற்பட்ட இச்சவால்களை தீர்க்கமான முறையில் கட்டுப்படுத்துவது பொருளாதாரம் உயர்ந்த மற்றும் உறுதியான வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றமடைவதற்கு அவசியமானதாகும். அத்தகைய உயர்ந்த வளர்ச்சியின் பயன்களை சமூகம் முழுவதற்குமிடையே நியாயமான முறையில் பங்கீடு செய்வதும் அனைவருக்குமான வாய்ப்புக்களை உருவாக்குவதும் இன்றியமையாததாகும்.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டக் கட்டளையுடன் இசைந்துசெல்லும் விதத்தில் 2019 இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்தின் மீதான இலக்கினை பூர்த்திசெய்தல்

“அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட சந்தைக் கடன் வழங்கல் வீதங்களுக்கு ஊடுகடத்துவதன் வினைத்திறனை அதிகரித்தல்” தொடர்பான 2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டத்தின் கட்டளை, மற்றைய விடயங்களுடன், ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் 2019 ஏப்பிறல் 26ஆம் திகதியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின் வெளியீட்டில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அவற்றின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்துடன்  ஒப்பிடுகையில் 2019 திசெம்பர் 27ஆம் நாளளவில் குறைந்தபட்சம் 250 அடிப்படைப் புள்ளிகளினால் அவற்றைக் குறைத்தல் வேண்டுமென தேவைப்படுத்தியது. இது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் எவ்வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் இக்கட்டளைத் திகதியன்று, அல்லது, அதற்குப் பின்னரான எந்த ஒரு நேரத்திலும் ஆண்டிற்கு 9.50 சதவீதத்தினை அடைந்துள்ளதோ அல்லது அதற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளதோ அத்தகைய வர்த்தக வங்கிகளுக்கு ஏற்புடைத்தாகமாட்டாது. 

Pages

சந்தை அறிவிப்புகள்