Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வழிகாட்டல் 2020 - 2020 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

இன்று, இலங்கையின் பொருளாதாரம் முக்கியமானதொரு காலகட்டத்தில் காணப்படுகிறது. இறைமையுடைய நாடென்ற ரீதியில் தசாப்த காலங்களாக வகுக்கப்பட்ட கொள்கை வழிமுறைகள் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களையும் முன்னேற்றியிருக்கின்றன. இருப்பினும் கூட, கடுமையான சவால்களாக - சராசரிக்கும் குறைவான வளர்ச்சி, ஆங்காங்கே காணப்படும் விடாப்பிடியான வறுமை, உற்பத்தியாக்க மூலவளங்கள் குறைந்தளவில் பயன்படுத்தப்படுகின்றமை, ஏற்றுமதிகள் போதுமானளவில் விரிவடையாமை மற்றும் பன்முகப்படுத்தப்படாமை, படுகடனை உருவாக்காத மூலதன உட்பாய்ச்சல்களில் காணப்படும் பற்றாக்குறை, பாரிய கொடுகடன் மற்றும் வட்டி வீத சுழற்சி வட்டம் மற்றும் உயர் இறைப் பற்றாக்குறைகள் மற்றும் பொதுப்படுகடன் மட்டங்கள் என்பன தொடர்ந்தும் காணப்படுகின்றன. கொள்கை சார்ந்த அதேபோன்று கொள்கை சாராக் காரணிகளின் விளைவாக ஏற்பட்ட இச்சவால்களை தீர்க்கமான முறையில் கட்டுப்படுத்துவது பொருளாதாரம் உயர்ந்த மற்றும் உறுதியான வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றமடைவதற்கு அவசியமானதாகும். அத்தகைய உயர்ந்த வளர்ச்சியின் பயன்களை சமூகம் முழுவதற்குமிடையே நியாயமான முறையில் பங்கீடு செய்வதும் அனைவருக்குமான வாய்ப்புக்களை உருவாக்குவதும் இன்றியமையாததாகும்.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டக் கட்டளையுடன் இசைந்துசெல்லும் விதத்தில் 2019 இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்தின் மீதான இலக்கினை பூர்த்திசெய்தல்

“அண்மைய கொள்கைத் தீர்மானங்களை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட சந்தைக் கடன் வழங்கல் வீதங்களுக்கு ஊடுகடத்துவதன் வினைத்திறனை அதிகரித்தல்” தொடர்பான 2019ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க நாணயவிதி சட்டத்தின் கட்டளை, மற்றைய விடயங்களுடன், ஒவ்வொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கியும் 2019 ஏப்பிறல் 26ஆம் திகதியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளின் வெளியீட்டில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அவற்றின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதத்துடன்  ஒப்பிடுகையில் 2019 திசெம்பர் 27ஆம் நாளளவில் குறைந்தபட்சம் 250 அடிப்படைப் புள்ளிகளினால் அவற்றைக் குறைத்தல் வேண்டுமென தேவைப்படுத்தியது. இது, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் எவ்வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதம் இக்கட்டளைத் திகதியன்று, அல்லது, அதற்குப் பின்னரான எந்த ஒரு நேரத்திலும் ஆண்டிற்கு 9.50 சதவீதத்தினை அடைந்துள்ளதோ அல்லது அதற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளதோ அத்தகைய வர்த்தக வங்கிகளுக்கு ஏற்புடைத்தாகமாட்டாது. 

நாணயக்கொள்கை மீளாய்வு: இல.8 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2019 திசெம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கையினைத் தொடர்ந்தும் பேணுவதற்குத் தீர்மானித்தது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. நாணயச்சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை 4–6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.

 

பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 திசெம்பர் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் அவரது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்அவர்களினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்படுவார். 

2019 நவெம்பாில் பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது

தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 5.6 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு 2018 நவெம்பாில் நிலவிய உயா்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கமே பங்களித்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கம் 2019 ஒத்தோபாின் 7.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.0 சதவீதத்திற்கு கணிசமாக வீழ்ச்சியடைந்த வேளையில் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு) 2019 ஒத்தோபாின் 4.3 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.

ஆண்டுச் சராசாியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகா்வோா் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஒத்தோபாின் 2.8 சதவீதத்திலிருந்து 2019 நவெம்பாில் 3.0 சதவீதத்திற்கு அதிகாித்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்