Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த பணவீக்கம் 2020 சனவரியில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 திசெம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த விலைகளின் அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2019 திசெம்பரில் 6.3 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 12.4 சதவீதம் கொண்ட 25 மாத உயர்வொன்றிற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2.9 சதவீதமாகக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 திசெம்பரில் 4.5 சதவீதத்திலிருந்து 2020 சனவரியில் 4.4 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது. 

இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 சனவரி 30ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் 50 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆய்வு செய்தமையினைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது. இத்தீர்மானமானது, 4–6 சதவீத வீச்சினுள் நன்கு நிலைப்படுத்தப்பட்டுள்ள பணவீக்கத்திற்கான சாதகமான நடுத்தரகால தோற்றப்பாட்டினைக் கருத்திற்கொண்டு சந்தை கடன் வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான குறைப்பொன்றுக்கு ஆதரவளித்து இதன் வாயிலாக பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சிக்கு வசதியளிக்கும்.

2019 திசெம்பரில் பணவீக்கம் அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2018 திசெம்பரில் நிலவிய தாழ்ந்த தளத்தின் புள்ளிவிபர விளைவுடன் சேர்ந்த உணவு வகையிலுள்ள விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் இது தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2019 நவெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2019 திசெம்பரில் 8.6 சதவீதத்திற்கு கணிசமாக அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 4.2 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. 

ஆண்டுச் சராசரியின் அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 நவெம்பரில் 3.0 சதவீதத்திலிருந்த 2019 திசெம்பரில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. 

தடயவியல் கணக்காய்வுகள்

மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வுகள் தொடர்பில் பல தவறான அறிக்கையிடல்கள் இடம்பெற்றுள்ளதை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் பின்வரும் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ள விரும்புகின்றது:-

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 நவெம்பர்

இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் இரண்டிலும் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக 2019 நவெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சிறிதளவில் சுருக்கமடைந்தது. 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில், ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்படட சிறிதளவு அதிகரிப்புடன் இறக்குமதிகள் மீதான செலவினத்தல் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி சேர்ந்த கொண்டமையின் விளைவாக, 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019 நவெம்பரில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், சுற்றுலா வருகைகள் வீழ்ச்சியடைந்த போதும், சுற்றுலாத் தொழில் துறையில் தொடர்ச்சியான மீட்சி அவதானிக்கப்பட்டிருக்கிறது. 2019 நவெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்து 2019இன் முதல் பதினொரு மாத காலப்பகுதியில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. அதேவேளை, சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது பிரிவின் பெறுகைகள் மற்றும் அரச பிணையங்கள் சந்தைக்கான தேறிய வெளிநாட்டு உட்பாய்ச்சல்களின் பெறுகைகள் என்பனவற்றுடன் பெருமளவிற்கு அதிகரித்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 திசெம்பர்

2019 திசெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.3 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவுகளின் இருப்புக்கள் என்பனவற்றில் ஏற்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும், 2019 நவெம்பருடன் ஒப்பிடுகையில் இன்னமும் மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவை தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறையின் மெதுவான தன்மையே காரணமாகும். தொழில்நிலையில், குறிப்பாக அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்களவு மெதுவான போக்கு காணப்பட்டமைக்குச் சாத்தியமான ஊழியர்கள் சிறந்த ஊதியங்களுக்காக பருவகாலத் தொழில்வாய்ப்புக்களுக்கு அவர்கள் கவரப்பட்டமையே காரணமாகும். தொழில்நிலையில் காணப்பட்ட மெதுவான போக்கு உற்பத்திக் குறைப்பில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்தியது. 

 

Pages

சந்தை அறிவிப்புகள்