Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 திசெம்பர்

2019 திசெம்பர் காலப்பகுதியில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் வீழ்ச்சியடைந்த வேளையில் இறக்குமதிகள் மீதான செலவினம் அதிகரித்தமையின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்தது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை கணிசமானளவில் சுருக்கமடைந்தமைக்கு இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட கடுமையான சுருக்கமே தூண்டுதலாக விளங்கியது. 2019 திசெம்பரில் சுற்றுலா தொழில்துறையில் விரைவான மீட்சி காணப்பட்ட போதும் இவ்வாண்டுப்பகுதியில் சுற்றுலாவிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் வீழ்ச்சியடைந்தன. 2019 திசெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து (ஆண்டிற்கு ஆண்டு) 2019இன் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி மிதமடைவதற்கு உதவியது. அதேவேளை, 2019 திசெம்பர் காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீடுகளில் கணிசமான வெளிப்பாய்ச்சலொன்று காணப்பட்ட வேளையில் கொழும்புப் பங்குச் சந்தையிலும் சிறியளவிலான தேறிய வெளிப்பாய்ச்சல்கள் அவதானிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டுப்பகுதியில் இலங்கை ரூபா ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக உயர்வடைந்து 2020ஆம் ஆண்டின் இதுவரையான பகுதியில் உறுதியாகக் காணப்பட்டது. 

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2020 பெப்புருவரி 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குப்படுத்தல் நடவடிக்கைகளானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களுக்கான  பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் அணுகுதலினை இடைநிறுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்ஃ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்(கொ.மு.சு) – 2020 சனவரி

2020 சனவரியில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மெதுவான வேகத்தில் விரிவடைந்து 54.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகளிலும் கொள்வனவு இருப்புக்களிலும் காணப்பட்ட மெதுவான விரிவாக்கமே முக்கிய காரணமாகும். 

குறிப்பாக உணவுத் தயாரிப்பு மற்றும் குடிபானத் துறையில் புதிய கட்டளைகள், உற்பத்தி மற்றும் கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண்கள் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு பண்டிகைக் காலத்திற்குப்பின்னர் கேள்வி குறைவடைந்தமையே காரணமாகும். மேலும், புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையின் கொள்வனவுகளின் இருப்புக்கள் மெதுவடைந்தமைக்கு சீனப் புத்தாண்டு விடுமுறைகள் காரணமாயமைந்தன. ஊழியர்கள் உயர்ந்த கொடுப்பனவுகளைக் கொண்ட தொழில்களைப் பெறுவதற்காக தமது தற்போதைய தொழில்களை விட்டுச்சென்றமையின் காரணமாக இம்மாதகாலப்பகுதியில் தொழில்நிலை சுருக்கமடைந்தது. 

மத்திய வங்கி கொடுப்பனவுச் செயலி விழிப்புணர்வு மற்றும் வங்கி வசதியளிப்பு அமர்வொன்றினை நடாத்தியிருக்கிறது

இலங்கை மத்திய வங்கி 2020ஆம் ஆண்டினை இலங்கையின் டிஜிட்டல் கொடுக்கல்வாங்கலுக்கான ஆண்டாகப் பெயரிட்டிருக்கிறது. இம்முயற்சியின் முக்கிய குறிக்கோள் உரிமம்பெற்ற வங்கிகளினாலும் ஏனைய நிதியியல் நிறுவனங்களினாலும் மற்றும் லங்கா கிளியர் பிறைவேட் லிமிடெட்டினாலும் நாட்டிற்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவுத் திட்டங்களைப் பிரபல்யப்படுத்துவதேயாகும். விழிப்புணர்வு என்பது  செல்லிடத் தொலைபேசிக் கொடுப்பனவு பிரயோகங்களின் பயன்பாட்டினை அதிகரிப்பதற்கான திறவுகோலாகும். இம்முயற்சி தொழில்நுட்பவியல் நியதிகளில் நாட்டினை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு உதவுமென மத்திய வங்கி நம்புவதன் காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீா்ப்பனவுத் திணைக்களம் டிஜிட்டல் கொடுப்பனவு மாதிரிகளைப் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கடன் வசதி

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இனி உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஊக்கத்தொகைகளை முழுமைப்படுத்த அந்தந்த உரிமம்பெற்ற வங்கிகளின் தகுதிவாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவன கடன்பெறுநர்களுக்கு சிறப்புக் கடன் ஆதரவுத் திட்டத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது வங்கிகளுக்கிடையில் சீரான திட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை கீழேயுள்ள இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திட்டத்தினுடைய முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ளனர்

அலுவலர் குழுவின் பின்னரான பத்திரிகை வெளியீடானது நாடொன்றிற்கான விஜயமொன்றினைத் தொடர்ந்து பூர்வாங்க கண்டுபிடிப்புக்களை/ பெறுபேறுகளைத் தெரிவிக்கின்ற ப.நா.நிதியத்தின் அலுவலர் குழுக்களின் கூற்றுக்களை உள்ளடக்கும். இக்கூற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென அவசியமில்லை. இந்த அலுவலர் குழு நிறைவேற்றுச் சபை கலந்துரையாடலுக்கு வழிவகுக்கமாட்டாது.

முழுவடிவம்

 

Pages

சந்தை அறிவிப்புகள்