Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி ரூ. 1000 முகப் பெறுமதியையுடைய தங்கம் மற்றும் வெள்ளி ஒரே சித்தரிப்புகளுடனான ஞாபகார்த்த நாணயக் குற்றிகளை இலங்கை - சீனாவுக்கிடையிலான 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன பொதுவுடைமைக் கட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவைக்  குறிக்கும் முகமாக  வெளியிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையைப் பாராட்டும் முகமாக இலங்கை அரசின் வேண்டுகோளின்படி நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகளில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள்

இலங்கை மத்திய வங்கியானது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்திற்கு பின்வரும் தகவல்களை வழங்க விரும்;புகின்ற அதேவேளை, வங்கித்துறையின் நிலைத்திருக்கும் தன்மைக்கு சவால்விடுக்கின்ற தரமிடல் நிறுவனங்களின் அறிக்கைகள் மற்றும் இலங்கை நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பவற்றில் உரிமம்பெற்ற வங்கிகளின் முதலீடுகள் தொடர்பான ஊகங்களையும் மறுக்கின்றது.

பின்வரும் முக்கிய இடர்நேர்வு தணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புக்களை வசதிப்படுத்துவதற்காகவும் நாட்டுக்கான வெளிநாட்;டுச் செலாவணியின் உட்பாய்ச்சலை மேலும் ஊக்குவிப்பதற்குமாக இலங்கை மத்திய வங்கியானது, வெளிமூலங்களிலிருந்தான வளங்களிலிருந்து நாட்டுக்கான பன்னாட்டு முறி மற்றும் இலங்கை அபிவிருத்தி முறி ஆகியவற்றில் சமமாகப் பகிரப்பட்டளவிலான முதலீடுகளை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2021 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணி நிலையினைப் பேணுவதற்கு வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட புதிய கட்டளை

நாட்டின் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலையினைப் பாதுகாப்பதன் மூலம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உதவியளித்து பேணும் நோக்குடன், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடனும் அமைச்சரவையின் ஒப்புதலுடனும் கௌரவ நிதியமைச்சர், 2021 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2234/49 அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது பின்வரும் இடைநிறுத்தல்கள்/ கட்டுப்பாடுகள் 2021 யூலை 02ஆம் திகதியிலிருந்து தொடங்குகின்ற ஆறு (06) மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும்.

முழுவடிவம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மேயின் 4.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 11.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மை மீதான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களின் அறிக்கை

கடந்த சில நாட்களாக, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையின் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையொன்று தொடர்பில் பல்வேறுபட்ட தனிநபர்கள் மற்றும் ஊடகங்களினால் கரிசனைகள் எழுப்பப்பட்டிருந்ததுடன் இவை வங்கிகளை இறக்குமதிகளுக்கு வசதிப்படுத்துவதிலிருந்தும் தடுத்திருந்தன. சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட அல்லது பரப்பப்பட்ட அறிக்கைகள் மிகவும் எதிர்மறையான கண்ணோட்டத்தை குறித்திருந்ததுடன் அவை நாட்டிற்கு மிகவும் தீங்கு விளைவிக்கவல்லன. இவ்விடயம் தொடர்பிலான உண்மையான நிலையினைத் தெளிவுபடுத்துவதற்காக நான் பின்வரும் அறிக்கையினை வெளியிட விரும்புகின்றேன்.

Pages

சந்தை அறிவிப்புகள்