கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 மேயின் 4.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 5.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 11.3 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மேயின் 2.2 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது 2021 யூனில் 1.47 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் இதற்குக் காரணமாக அமைந்தன. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் முறையே 1.25 சதவீதத்தினையும் 0.21 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் அரிசி, காய்கறிகள், உடன் மீன் என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளையில் உடன் பழங்களின் விலைகள் வீழ்ச்சியினைப் பதிவுசெய்தன. அதேவேளை, உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன. இதற்கு, நலம் (மருந்தக உற்பத்திகளின் கொள்வனவு, ஆயுர்வேத வைத்தியர்களுக்கான கட்டணங்கள்) மற்றும் போக்குவரத்து (பெற்றோல், டீசல்) துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனில் 3.2 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. மேலும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கமும் 2021 மேயில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாகவும் 3.0 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, June 30, 2021