ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது/ மற்றும் உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை அவர்கள் வழங்குவார்கள் என்றும் கூறுகின்றதாகத் தோன்றுகின்றதான சில மோசடிகள் தொடர்பான தகவல்களை அண்மைக் காலமாக இலங்கை மத்திய வங்கி பெற்று வருகிறது. சில சமயங்களில் அவர்கள் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி மட்டுமே இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.















இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
