மூன்று மாதங்களுக்கு முன்னர் இதேவிதத்தில் தரம் குறைப்பதற்கான மீளாய்வின் கீழ் இடம்பெறச் செய்யப்பட்டதன் பின்னர் தரப்படுத்தல் நடவடிக்கைக்கு இட்டுச்சென்ற மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸ் (மூடீஸ்) இன் அண்மைய கணிப்பீடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் வலுவான அதிருப்தியினை வெளிப்படுத்துகின்றது. மீண்டுமொரு தடவை இலங்கை தொடர்பில் மூடீஸ் இன் நியாயப்படுத்த முடியாத தரப்படுத்தல் நடவடிக்கையானது 2022 இற்கான அரசாங்க வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படுகின்ற முக்கிய நிகழ்வுக்கு முன்னர் சில நாட்களே உள்ள நிலையில்; வெளியிடப்பட்டுள்ளதுடன் இது, வெளிப்படையாகவே அவசரமானதும் வரவுசெலவுத்திட்டத்தின் தன்மையானது அரசாங்கத்தின் நிதியளித்தல் திட்டத்திற்கு பெருத்தமற்றது என்பது மூடீஸ் பகுப்பாய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்பட்ட கருத்தான அத்தகைய பகுப்பாய்வாளர்களின் குறைவான புரிந்துணர்வினைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் சாதகமான அபிவிருத்திகள் மற்றும் எதிர்பார்க்கைகளை அவர்கள் முறைமைசார்ந்த விதத்தில் கவனிக்காது விட்டு, ஆயினும், இழப்புகளுடன் இணைந்த இடர்நேர்வுகளுக்கு அதிக அழுத்தத்தினை சாட்டுக்கின்ற அத்தகைய முகவராண்மைகளின் தீவிரமான ஆளுகைப் பலவீனங்களையும் இது பிரதிபலிக்கின்றது.















இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
