Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விடுக்கும் செய்தி

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும் முனைவர் (திருமதி) ராணி ஜயமகா அவர்களும் எப்போதும் மிகவும் சுயாதீனமாகவும் தொழில்சார்பண்புடனும் விடாமுயற்சியுடனும் செயற்படுவதனாலும் இலங்கை மத்திய வங்கியின் அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் சாதகமாகப் பங்களித்துள்ளமையினாலும் நாணயச் சபையில் அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். அவர்களது முழுமையான தொழில்சார்பண்பில் நான் முழுமையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதனால் தேசத்திற்கும், நாணயச் சபைக்கும் அதேபோன்று ஆளுநர் என்ற வகையில் எனக்கும் அவர்களது தொடர்ச்சியான பங்களிப்பினையும் பெறுமதியான வழிகாட்டலையும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

2022 ஏப்பிறல் 11 மற்றும் 12 திகதிகளில் வங்கித் தொழிற்பாடுகள்

2022 ஆம் ஆண்டு ஏப்பிறல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காகத் திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு  தெரிவிக்கப்படுகின்றது.

 

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 03 - 2022 ஏப்பிறல் (விபரமான பதிப்பு)

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை கணிசமானளவு இறுக்கமடையச் செய்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை 2022 ஏப்பிறல் 08 வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் 700 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 13.50 சதவீதத்திற்கும் மற்றும் 14.50 சதவீதத்திற்கும் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. கூட்டுக் கேள்வி கட்டியெழுப்பப்படுதல், உள்நாட்டு நிரம்பல் இடையூறுகள், செலாவணி வீத தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் பண்டங்களின் உயர்வடைந்த விலைகள் போன்றவற்றினால் உள்நாட்டில் எதிர்வரும் காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக் கூடுமென்பதனைக் கரிசனையில் கொண்டு நாணயச் சபையானது பொருளாதாரத்தில் மேலதிகக் கேள்வித் தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் கட்டியெழுப்பப்படுவதனை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதனை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலவாணி வீதத்தினை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தினை வழங்குவதற்கும் வட்டி வீதக் கட்டமைப்பில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களினைத் திருத்தியமைப்பதற்கும் கணிசமான கொள்கைப் பதிலிறுப்பு இன்றியமையாததெனினும் கருத்தினைக் கொண்டுள்ளது. 

முனைவர். பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்

முனைவர் பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முனைவர் வீரசிங்க நாணய மற்றும் செலாவணி வீதக் கொள்கையில் நீடித்த அனுபவத்துடன் கூடிய தொழில்சார் மத்திய வங்கியாளரொருவர் ஆவார். முனைவர் வீரசிங்க பன்னாட்டு நாணய நிதியத்தில் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றிய வேளையில் 2011 செத்தெம்பர் 27ஆம் நாளன்று துணை ஆளுநராக பதவியுயர்த்தப்பட்டு 2012 செத்தெம்பர் 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். முனைவர் வீரசிங்க பொருளியலில் முனைவர் பட்டத்தினையும் முதுமானிப் பட்டத்தினையும் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்தும் விஞ்ஞானமானிப் பட்டத்தினை இலங்கை களனி பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுக்கொண்டார்.

2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது

2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக  அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. அதற்கிணங்க , 2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளது. ஊடக  அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும்.

Pages

சந்தை அறிவிப்புகள்