ஏற்றுமதிப் பெறுகைகளை மாற்றுவதற்கான புதிய விதிமுறைகள் நாட்டிற்குப் பல்வேறு நன்மைகளை ஈட்டித்தருவதுடன் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உள்முக பணவனுப்பல்களில் எவ்வித தாக்கங்களினையும் ஏற்படுத்தாது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து உறுதியான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, பேரண்டப் பொருளாதார மற்றும்  நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நோக்கிய முனைப்புடனானதொரு பாதையில் தடம் பதித்துள்ளது. உலகளாவிய நோய்த்தொற்று நாட்டிற்கான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தில் கணிசமானதொரு இழப்பினை விளைவித்த போதும் இறை, நாணய மற்றும் பொது சுகாதார விடயங்களில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத ஆதரவு பொருளாதாரத்தின் வலுவான மீளெழுச்சிக்கும் அதேபோன்று சில வெளிநாட்டுச் செலாவணியீட்டும் துறைகளில் கணிசமானதொரு மீட்சிக்கும் துணைபுரிந்துள்ளது. சுற்றுலாத் துறையும் எதிர்வரும் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியைக் காண்பிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் முறைசார் வழிகளினூடாக தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சந்தையில் காணப்பட்ட அண்மைய பதட்ட நிலைகளும் பொருளாதாரத்தினைப் பல்வேறு வகையிலான அதிர்வுகளுக்கு உட்படுத்தும் அதன் வெளிநாட்டுக் கடன்பாடுகளை அதிகரிப்பதற்குப் பதிலாக இலங்கை காலப்போக்கில் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் மீது அதனுடைய தங்கியிருக்கும் தன்மையினை அதிகரிப்பதற்கான தேவையினை எடுத்துக்காட்டியுள்ளது. 

இச்சூழ்நிலையில், 2021 பெப்புருவரியில், மத்திய வங்கி நாணய விதிச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வணிகப்பொருள் ஏற்றுமதிகளின் பெறுகைகளின் மீதான தற்போது நிலவுகின்ற மீளனுப்பல் தேவைப்பாட்டினை வலுவூட்டுவதற்கும் குறிப்பிட்டதொரு காலப்பகுதியினுள் அத்தகைய பெறுகைகளின் பெறப்பட்ட பங்கொன்றினது மாற்றலினை உறுதிப்படுத்துவதற்குமான விதிமுறைகளை வெளியிட்டது. அண்டைய நாடுகளின் ஒத்த விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த இவ்விதிமுறைகள், வியாபார சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களின் பேரில் காலத்திற்குக் காலம் சீராக்கப்பட்டிருந்த அதேவேளை, அவை ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்புதலிலும் மாற்றலிலும் படிப்படியான முன்னேற்றத்துடன் உள்நாட்டுச் சந்தை எதிர்கொண்ட வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை சிக்கல்களை ஓரளவு தளர்த்துவதற்குத் துணைபுரிந்துள்ளன. மேலும், உரிமம்பெற்ற வங்கிகளினால் மேற்கூறப்பட்ட விதிமுறைகளின் கீழ் மாற்றப்பட்ட ஏற்றுமதிப் பெறுகைகளின் கட்டாய விற்பனைகளுடன் மத்திய வங்கி ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சந்தையிலிருந்தான வெளிநாட்டுச் செலாணியின் நியாயமானதொரு அளவினைக் கொள்வனவு செய்வதற்குக்கூடியதாய் அமைந்ததுடன் கடந்த சில வாரங்களில் நாட்டிற்கான அத்தியாவசியப் பண்டங்களின் இறக்குமதிகளுக்குப் பகுதியளவில் நிதியீட்டுவதற்கு இதனை மத்திய வங்கி பயன்படுத்தியுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Monday, November 8, 2021