Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 பெப்புருவரி

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 பெப்புருவரியிலும் விரிவடைந்தன.

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 பெப்புருவரியில் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இம்மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை வழங்குநர் விநியோக நேரம் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது.   

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2022 பெப்புருவரியில் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் துறை முழுவதும் சிறிதளவான வளர்ச்சியொன்றினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் ஆகிய துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் இச்சிறியளவான அதிகரிப்புக்கு துணையளித்திருந்தன.

பாரியளவிலான பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கைசார்ந்த திட்டம் : செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையை அனுமதித்தல்

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால  அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கையில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன் பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்குமெனவும் இலங்கை மத்திய வங்கியானது குறிப்பிட்டிருந்தது.

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.

அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு 03ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், 2022 சனவரியில் பின்பற்றப்பட்ட அதன் நிலைப்பாட்டை மீளவும் வலுப்படுத்துவதற்கு தீர்மானித்ததுடன், பின்வரும் தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தது:

அதிகாரமளிக்கப்படாத வெளிநாட்டு நாணய வணிகம் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களைக் கோருகின்றது

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவுசெய்வதற்கான, விற்பனைசெய்வதற்கான, பரிமாற்றம்செய்வதற்கான அனுமதி, அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கும் (அதாவது உரிமம்பெற்ற வங்கிகள்) இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கும் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகையினால், வெளிநாட்டு நாணயத்தின் கொள்வனவு, விற்பனை அல்லது பரிமாற்றம் என்பன அதிகாரமளிக்கப்பட்ட வணிகர் ஒருவர் ஊடாக அல்லது அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 சனவரி

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 0.6 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 சனவரியில் 58.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் தொழில்நிலையில் மீட்சியுடன் ஒன்றிணைந்து புதிய கட்டளைகள், உற்பத்தி என்பவற்றில் பதிவாகிய மேம்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் கொள்வனவுகளின் இருப்பு அதிகரித்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் நீட்சியடைந்தது.

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 57.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2022 இன் தொடக்கத்தில் பணிகள் துறையில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள், தொழில்நிலை மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள், இவ்வதிகரிப்பிற்கு துணையளித்திருந்தன. 

இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான அதேபோன்று சிறியவிலான தகைமையுடைய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாகவிருந்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை மேலும் பிரபல்யப்படுத்துவதற்கு சில இலங்கைத் தூதரங்களுடனான கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியும் அந்தந்தநாடுகளிலுள்ள தகைமையுடைய முதலீட்டாளர்களுடன் தொடர்பினை மேற்கொண்டிருந்தது.

Pages