Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) - 2021

இலங்கையின் பெருமளவிலான முக்கிய நடவடிக்கைகளின் மையப்பகுதியாக விளங்குகின்ற மேல் மாகாணம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் பங்கில் சிறிதளவிலான அதிகரிப்பொன்றுடன் 2021இல் பெயரளவிலான மொ.உ.உற்பத்தியின் (அடிப்படை ஆண்டு 2015) 42.6 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வெளியீட்டிற்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களித்துள்ளது. வடமேல் (11.1 சதவீதம்) மற்றும் மத்திய (10.1 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளை பதிவுசெய்தன. 

மேல், சப்பிரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து பெயரளவிலான மொ.உ.உற்பத்திக்கு கிடைத்த பங்களிப்பு, 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் அதிகரித்த அதேவேளை, தென், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பங்களிப்பு மாற்றமின்றிக் காணப்பட்டன. எனினும், மத்திய, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து கிடைத்த பங்களிப்புக்கள் 2021இல் சிறிதளவு குறைவடைந்தன.

 

சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - உரிமத்தை இரத்துச்செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 37(3) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022 திசெம்பர் 28ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்ட நிதித்தொழில் உரிமத்தினை இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமை, நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலில் ஈடுபடுவதற்கு 2022 திசெம்பர் 28 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அனுமதிக்கப்படாது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்கும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 70.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 65.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஒத்தோபரின் 80.9 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 69.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஒத்தோபரின் 61.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 60.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2022 நவெம்பர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டுக்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 நவெம்பரில் சுருக்கமடைந்து காணப்பட்டன.

தயாரிப்பு நடவடிக்கைகளில் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் பின்னடைவினை எடுத்துக்காட்டி, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2022 நவெம்பரில் 42.1 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. நிரம்பலர் விநியோக நேரத்திற்கானவை தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றம் இப்பின்னடைவிற்கு பங்களித்திருந்தது.   

பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது ஒத்தோபரின் 47.9 சுட்டெண் பெறுமதியிலிருந்து உயர்வடைந்து 2022 நவெம்பரில் 49.0 பெறுமதியினைப் பதிவுசெய்தது, இருந்தும் நடுநிலையான அடிப்படை மட்டத்திற்கு சற்றுக் கீழேயே காணப்பட்டது.  புதிய வியாபாரங்கள், தொழில் நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளுடன் பணிகள் நடவடிக்கைகளில் வீழ்ச்சி வீதம் தளர்வடைந்தது.  எவ்வாறாயினும், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணிகள் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. 

மோசடியான அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை விழிப்பூட்டல்

மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்தக் கோரி, பொய்யான தகவல்களை வழங்குவதன் வாயிலாக தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் கோவைப்படுத்தப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக துரித அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டு வருகின்றது. 

2022 யூலை 01 தொடக்கம் 2022 நவெம்பர் 16 வரை நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான இணங்குவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதியியல் உளவறிதல் பிரிவினால் நிருவாக ரீதியான தண்டப் பணங்களை விதித்தல்/சேகரித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டப்பணங்கள் நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு விதித்துரைக்கப்படுகிறது.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு  2022  யூலை 01 தொடக்கம் 2022 நவெம்பர் 16 வரையான காலப்பகுதியில் உளவறிதல் பிரிவு  கீழேயுள்ளவாறு ரூ.10.75 மில்லியன் கொண்ட மொத்தத் தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது.  தண்டப்பணமாக சேகரிக்கப்பட்ட நிதித் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டிருக்கிறது. 

Pages