கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் நீடித்து நிலைக்கின்ற தாக்கம், உலக அரசியல் சமமின்மைகள் அத்துடன் நாட்டின் பேரண்டப் பொருளாதார சமமின்மைகள் காரணமாக தற்போது இலங்கை சமூகப் பொருளாதார மற்றும் நிதியியல் இடர்பாடுகளை எதிர்கொண்டு,ள்ளமை நாட்டு மக்களுக்கு இன்னல்களைத் தோற்றுவித்துள்ளது. நாட்டின் மேற்குறித்த நிலைமையினை கையாள்வதற்கு, நாட்டின் படுகடன் கடப்பாடுகளை முனைப்பாக முகாமைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், ஏனைய நாடுகளிடமிருந்து உடனடி நிதி உதவியினை நாடுதல் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றுக்காக பன்னாட்டு நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக பல வழிமுறைகளை அதிகாரிகள் எடுத்துவருகின்ற போதிலும், அத்தகைய வழிமுறைகளின் சாதகமான தாக்கங்கள் எமது மக்களுக்கு நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திலேயே நன்மைபயக்கும். ஆகையினால், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாக நாளாந்த அத்தியாவசிய இறக்குமதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கு நிலையினை அதிகரிப்பதற்கு அவசரமான வழிமுறைகள் தேவைப்படுகின்றன.















