Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது

2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாத நடவடிக்கைகளில் சில அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் ஈடுபடுகின்றமை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் தொடர்ச்சியான திடீர் பரிசோதனைகளை மேற்கொள்கின்றது. இதன்மூலம் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பலப்படுத்தப்படும்.

2021 நவம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனைகளின் போது, பின்வரும் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரைகளுடன் இணங்கியொழுகாமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் தொடர்பான பணிப்புரைகளுடன் இணங்கியொழுகுவதற்கு அவர்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

“உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான மேலதிக ஊக்குவிப்புத் திட்டம்” பற்றிய தொழிற்பாட்டு அறிவுறுத்தலை மத்திய வங்கி வழங்கியுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்படுகின்ற ரூ.2.00 ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக 2021.12.01 தொடக்கம் 2021.12.31 வரையான காலப்பகுதியின் போது உரிமம்பெற்ற வங்கிகள், ஏனைய சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைசார்ந்த வழிகளூடாக தொழிலாளர்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற போது அத்தகைய நிதியங்களுக்காக  ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ஊக்குவிப்பாக ரூ.8.00 கொண்ட தொகையினை கொடுப்பனவு செய்வதற்குத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2021 திசெம்பர் மாதகாலப்பகுதியில் இலங்கை ரூபாய்களாக மாற்றப்படுகின்ற வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களினால் அனுப்பப்படுகின்ற பணத்திற்காக ஐ.அ.டொலர் ஒன்றிற்கான மொத்த ஊக்குவிப்புத் தொகை ரூ.10.00 ஆக அமைந்திருக்கும்.

Request for Proposals for Securitised Financing Arrangement for the Government of Sri Lanka

The Central Bank of Sri Lanka (CBSL), on behalf of the Government of Sri Lanka (GOSL) requested proposals from international investor community on 12 November 2021 for the arrangement of a medium-term foreign currency financing facility by securitising the foreign currency receipts of the Central Bank of Sri Lanka under the mandatory sale of ten (10) per cent of workers’ remittances converted into Sri Lankan Rupees by licensed banks. The deadline for submitting responses was 15.00 hrs on 30 November 2021.

Accordingly, there were seven (7) responses, among which there were five (5) leading international banks and two (2) established investment arrangers.

These responses are being reviewed to determine the most suited modality to initiate the securitised financing arrangement.

2021 நவெம்பரில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்காண்டு பணவீக்கம் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் ஆண்டுச்சராசரி பணவீக்கம் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஒத்தோபரின் 7.6 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 ஒத்தோபரின் 4.8 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 5.3 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 12.8 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 17.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 5.4 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது

நாணயக்கொள்கை மீளாய்வு: இல. 08 - 2021 நவெம்பர்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2021 நவெம்பர் 24ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றினை முறையே 5.00 சதவீதம் மற்றும் 6.00 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்டப் பொருளாதார நிலைமைகளயும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையிற் கொண்டதன் பின்னர் சபையானது இத்தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. அண்மைய பணவீக்க அதிகரிப்பானது வழங்கல் இடையூறுகள் அத்துடன் உலகளவில் பண்ட விலைகளின் திடீர் அதிகரிப்பு என்பவற்றின் முக்கிய காரணமாகவே தூண்டப்பட்டிருந்ததென நாணயச்சபையானது அவதானத்தில் கொண்டிருந்ததுடன் முன்னோக்கிய காலப்பகுதியில் பொருளாதாரம் அதனது சாத்தியப்பாட்டினை அடைந்துகொள்வதற்கு ஆதரவளிக்கின்ற அதேவேளை பொருத்தமான வழிமுறைகளுடன் நடுத்தரகாலத்தில் இலக்கிடப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தினைப் பேணுவதற்கான அதன் கடப்பாட்டினை மீளவும் வலியுறுத்தியிருந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 ஒத்தோபரில் அதிகரித்துள்ளது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செத்தெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 8.3 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரின் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 11.7 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு)  2021 செத்தெம்பரின் 3.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், 2021 செத்தெம்பரின் 5.5 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முழுவடிவம்

Pages

சந்தை அறிவிப்புகள்