2023 மாச்சு 20 அன்று, பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்தும் வேறு பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்தும் ஐ.அ.டொலர் 7 பில்லியன் நிதியிடலுக்கு வழியமைத்து பன்னாட்டு நாணய நிதியச் சபை இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒப்புதலளித்தது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டமானது கொள்கை நடைமுறைப்படுத்தல் நியதிகளில் தெளிவான வழிகாட்டலொன்றை வழங்குவதுடன் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி, சாத்தியமான அதன் வளர்ச்சியினை மீட்டெடுப்பதற்கும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் தன்மைகளை நிவர்த்திசெய்வதையும் இயலச்செய்கின்றது.
இலங்கையில் தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமை பற்றி விளக்கமளிப்பதற்கும், பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய தூண்கள் அத்துடன் குறிக்கோள்கள் பற்றியும் அதேபோன்று கடன்கொடுநர்களுடன் ஈடுபடுவது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துரைப்பதற்கும் நாம் இன்று முதலீட்டாளர் எடுத்துரைப்பொன்றினை நடாத்தினோம்.
இலங்கை அரசாங்கமானது பேராவல்மிக்க மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரலில் கால்பதித்துள்ளதுடன் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிதியளிப்பினைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்கூட்டிய நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம், இறைத் திரட்சி மற்றும் இறைசார் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தல்; பொதுப்படுகடன் நிலைபெறுதன்மையினை மீளமைத்தல்;; விலை உறுதிப்பாட்டினை மீள்நிலைப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு தாங்கியிருப்புக்களை மீளக்கட்டியெழுப்புதல்; நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல்; ஊழல் மூலம் பாதிக்கப்படும் தன்மைகளைக் குறைத்தல் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கின்ற மறுசீரமைப்புக்களை மேலும் அறிமுகப்படுத்தல் போன்றவற்றை அடைந்துகொள்வதற்கு நாம் முழுமையாக அர்ப்பணித்துள்ளோம். அரசாங்கத்தின் முன்னுரிமை இலங்கை மக்களேயாகும் என்பதுடன் பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் பாகமாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய வகுப்பினரைப் பாதுகாப்பதற்கு ஏற்கனவே காணப்படுகின்ற சமூகப் பாதுகாப்பு வலைகளை மேம்படுத்துவதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.
இதன் விளைவாக, ஆண்டிற்கு ஆண்டு பணவீக்க வேகம் குறைந்து சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மிகவும் நியமமான மட்டங்களுக்கு மீளத்திரும்புவதுடன் இணைந்து இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே சில ஊக்கமளிக்கின்ற உறுதியடையும் சமிக்ஞைகளைக் காண்பிக்கின்றது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கும் ஆதரவளிக்கும் பொருட்டு எமது மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நாம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவோம்.
இறைத் திரட்சி முயற்சிகளுக்கு மத்தியில், அனைத்தையுமுள்ளடக்கிய படுகடன் பரிகாரமொன்று இல்லாவிடின் இலங்கையின் படுகடன் போக்கானது நிலைபேறற்றதாகவே காணப்;படும். பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்ட காலத்திலும் இலங்கை குறிப்பிடத்தக்க வெளிநாட்டு நிதியளிப்பு இடைவெளியொன்றினையும் எதிர்கொள்கின்றது. இந்நிதியளிப்பு இடைவெளியானது புதிய வெளிநாட்டு நிதியிடல் மற்றும் வெளிநாட்டு படுகடன் தீர்ப்பனவு நிவாரணம் என்பனவூடாக நிவர்த்திசெய்யப்பட வேண்டும். திரவத்தன்மை நிவாரணத்தை நோக்காகக் கொண்ட உள்நாட்டுப் படுகடன் உகந்ததாக்குதல் தொழிற்பாடொன்றிற்கான (னுழஅநளவiஉ னுநடிவ ழுpவiஅணையவழைn ழுpநசயவழைn) தெரிவுகள் பற்றி அதிகாரிகள் ஆராய்கின்ற அதேவேளை இலங்கையின் மீள்கொடுப்பனவு இயலளவு மேலும் சிதைவதைத் தவிர்ப்பதற்கு நிதியியல் உறுதிப்பாட்டினை பாதுகாக்கின்றனர். இவ் உள்நாட்டு படுகடன் உகந்ததாக்குதலானது தன்னார்வ அடிப்படையில் நடாத்தப்படவுள்ளதுடன் முக்கிய திறைசேரி உண்டியல்கள் வைத்திருப்போருடனான எமது ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
நாம் முன்னோக்கிச் சென்று, வெளிப்படையான வழியிலும் நல்லெண்ணத்துடனும் அனைத்து எமது கடன்கொடுநர்களுடனுமான ஈடுபாட்டினை துரிதப்படுத்தி தீவிரப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் என்பதுடன் பன்னாட்டு நாணய நிதிய படுகடன் நிலைபெறுதன்மைப் பகுப்பாய்வுடனும் பரிகாரக் கோட்பாட்டின் ஒப்பீட்டுடனும் ஒத்திசைவாகவுள்ள படுகடன் பரிகார உடன்படிக்கைகளை எட்டுவதற்கும் நாம் திட்டமிடுகின்றோம்.