கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம், 2023 மே இல் தொடர்ந்தும் சடுதியான வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 ஏப்பிறலின் 35.3 சதவீதத்திலிருந்து 2023 மேயில் 25.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் இவ்வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்பிறலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சிப் பாதைக்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 ஏப்பிறலின் 30.6 சதவீதத்திலிருந்து 2023 மேயில் 21.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2023 ஏப்பிறலின் 37.6 சதவீதத்திலிருந்து 2023 மேயில் 27.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2023 மேயில்  -0.02 சதவீதத்தைப் பதிவுசெய்தது. இச்சிறிய மாதாந்த மாற்றத்திற்கு 0.53 சதவீதமாகவிருந்த உணவு வகையில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் மூலம் -0.56 சதவீதமாகவிருந்த உணவல்லா வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை வீழ்ச்சிகளின் எதிரீடு காரணமாக அமைந்தது. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2023 ஏப்பிறலின் 27.8 சதவீதத்திலிருந்து 2023 மேயில் 20.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

முன்னோக்கி நோக்குகையில், கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் பணவீக்கத்தின் வீழ்ச்சிப் போக்கானது முன்கூட்டி எறிவுசெய்யப்பட்டதை விட விரைவாக 2023இன் 3ஆம் காலாண்டில் ஒற்றை இலக்க மட்டங்களை நோக்கி பணவீக்கத்தினை தொடர்ந்தும் குறைவடையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளின் காலங்கடந்த தாக்கம், இலங்கை ரூபாய் வலுவடைதல், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் குறைவு, உணவு விலைகள் இயல்புநிலைக்குத் திரும்புதல் அத்துடன்  சாதகமான புள்ளிவிபரத் தளத் தாக்கத்தின் விளைவு என்பன மூலம் பணவீக்க வீழ்ச்சி செயன்முறை துணையளிக்கப்பட்டுள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, May 31, 2023