இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்கு வீதத்தைக் குறைப்பதன் மூலம் வட்டி வீதங்களை குறைப்பதற்கும் சந்தைத் திரவத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (உரிமம் பெற்ற வங்கிகள்) மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் என்பன அதிக வட்டி வீதங்களைக் கடன்களுக்கு அறவிடுவதையும் அதிகப்படியான வட்டி வீதங்களை வைப்புகளுக்கு வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் நன்றாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இலங்கையின் உண்மை வட்டி விகிதங்களைப் பிராந்தியப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியானதாகக் காணப்படுகின்றன.