2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2) பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் ரீதியான தண்டங்கள் விதிக்கப்படலாம். நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர் குறிக்கப்பட்ட நிதிசாரா தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரமான தன்மை என்பவற்றை பரிசீலனையில் கொண்டு தண்டங்கள் குறித்துரைக்கப்படலாம்.
















