இலங்கையின் வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 2020 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2021இல் குறிப்பிடத்தக்க மேம்பாடொன்றினைக் காண்பித்துள்ளது. அண்மைய சுங்கத் தரவுகளுக்கமைய, 2020இல் பதிவுசெய்யப்பட்ட மாதாந்த சராசரியான ஐ.அ.டொலர் 837 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி வருவாய்கள் 2021 ஓகத்து இறுதியிலுள்ளவாறாக எட்டு மாத காலப்பகுதியின் சராசரியாக ஐ.அ.டொலர் 985 மில்லியனைக் கொண்டுள்ள வேளையில், சராசரி வருவாய்கள் 2021 யூன் - ஓகத்து காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,064 மில்லியன் பெறுமதியாக பதிவுசெய்யப்பட்டது. இலங்கை உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் பாரிய வெளிநாட்டுச் செலாவணி ஈட்டுநராக வணிகப்பொருள் ஏற்றுமதித் துறை (வெவ்வேறான உற்பத்திகள் உள்ளடங்கலாக) காணப்படுவதால் இவ் அபிவிருத்தி பாராட்டத்தக்கதொன்றாகும்.















இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும் இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
