Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டி – 2023இன் முதலாம் அரையாண்டு

கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் மெதுவடைவொன்றை எடுத்துக்காட்டி, 7.1 சதவீதம் கொண்ட வளர்ச்சி வீதமொன்றைப் பதிவுசெய்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளிலும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளிலும் இத்தகைய மெதுவடைவை அவதானிக்கலாம். இவை, முறையே 8.8 சதவீதம், 6.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம்  கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது அரையாண்டு அடிப்படையில் வீழ்ச்சியொன்றை எடுத்துக்காட்டியதுடன் 2023இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் 2.1 சதவீதம் கொண்ட மிதமடைந்த வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. இவ்வீழ்ச்சிக்கு 2023இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலும் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகளிலும் ஏற்பட்ட மெதுவான அதிகரிப்பு பெருமளவில் காரணமாக அமைந்தது.

நிதியியல் உளவறிதல் பிரிவினால் 2023 செத்தெம்பர் 27 தொடக்கம் திசெம்பர் 31 வரை நிதியியல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட நிருவாக ரீதியான தண்டப்பணங்கள்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.

அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனர் என்ற ரீதியில், நிதியியல் உளவறிதல் பிரிவு, நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு 2023 செத்தெம்பர் 27 தொடக்கம் திசெம்பர் 31 வரையான காலப்பகுதியில் கீழே காட்டப்பட்டவாறு, மொத்தமாக ரூ.14 மில்லியன் கொண்ட தொகையினைத் தண்டப்பணமாக சேகரித்தது. தண்டப்பணங்களாக சேகரிக்கப்பட்ட தொகைத் திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டன.

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டது

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் வேறு தொடர்புபட்ட குற்றங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் தொடர்புடைய தகவல்களை பரிமாற்றிக்கொள்வதற்கு இலங்கை மதுவரித் திணைக்களத்துடன் 2024 சனவரி 09 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களின் பிரசன்னத்துடன் மதுவரி ஆணையாளர் நாயகம் திரு. ஜே. எம். எஸ். என். ஜயசிங்க, நிதியியல் உளவறிதல் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் திருமதி. ஈ. எச். மொஹொட்டி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டனர். 

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை அறிக்கை - 2024 பெப்புருவரியினை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் இன்று (2024.02.15) நாணயக் கொள்கை அறிக்கை - 2024 பெப்புருவரியினை வெளியிட்டது. இவ்வறிக்கையின் உள்ளடக்கமானது முக்கியமாக 2024 சனவரி மாத மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாாிப்பு மற்றும் பணிகள்) - 2024 சனவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 சனவரியில் தயாாிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டின.

தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 சனவாியில் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

பணிகளுக்கான இலங்கை கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 60.1 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 சனவரியில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்களின் நியமனம்

 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுகைச் சபை, இலங்கை மத்திய வங்கியின் நிருவாகம் மற்றும் அலுவல்களின் முகாமைத்துவம் என்பனவற்றை மேற்பார்வை செய்வதற்கான பொறுப்புக்களைக் கொண்ட சபையாகவும் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சபையாகவும் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆளுகைச் சபை

 ஆளுகைச் சபையானது ஆளுகைச் சபையின் தலைவராகச் செயலாற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான முனைவர். பி. நந்தலால் வீரசிங்க, திரு. ஏ. என் பொன்சேகா (2022.07.27 இலிருந்து இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் நியமன உறுப்பினராக இருந்த இவர் ஆளுகைச் சபையின் உறுப்பினராகத் தொடர்ந்தும் பணியாற்றுகின்றார்) முனைவர். ரவி ரத்னாயக்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்), திரு. அனுஷ்க எஸ் விஜயசிங்க (2023.09.21 அன்று நியமிக்கப்பட்டார்) மற்றும் திரு. விஷ்  கோவிந்தசாமி (2023.10.26 அன்று நியமிக்கப்பட்டார்) ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது.

மேலும், நாம் இத்தால் திரு. ரஜீவ் அமரசூரிய மற்றும் திரு. மணில் ஜயசிங்க ஆகியோர் ஆளுகைச் சபைக்கு நியமிக்கப்பட்டிருப்பது பற்றி அறியத் தருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரக் குறிப்புக்கள் பின்வருமாறு தரப்படுகின்றன.

Pages

சந்தை அறிவிப்புகள்