Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கல்

நாணயச் சபையானது சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டிற்கு வழங்கப்பட்ட அனுமதியினை நிதி வியாபாரச் சட்டத்தின் 37(3)ஆம் பிரிவிற்கமைய 2018.03.05 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இரத்துச் செய்தது.

2010ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க (திருத்தப்பட்டவாறு) இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தின் ஒழுங்குவிதிகளிற்கமைய (இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகள்) 2018 ஓகத்து 27 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் சென்றல் இன்வெஸ்ட்மன் அன்ட் பினான்ஸ் லிமிடெட்டின் காப்புறுதி செய்யப்பட்ட வைப்பாளர்களுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது என்பதை இலங்கை மத்திய வங்கி மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. 

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு, காப்புறுதித் துறையில், பணம் தூயதாக்கலுக்கெதிரான/ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வு மேற்பார்வையின் அடிப்படையில் கண்டறியப்பட்ட தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 ஓகத்து 01ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.

வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 யூன்

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2018 யூனில் கலப்பான செயலாற்றமொன்றினைக் காட்டியது. யூன் மாத காலப்பகுதியில் உண்மை நியதிகளிலான வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டுப்பகுதியில் குறைவான மட்டத்தைப் பதிவுசெய்த போதிலும் இறக்குமதிச் செலவினங்களின் வளர்ச்சியானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விட கூடுதலாகக் காணப்பட்டதன் விளைவாக 2017 யூனில் வர்த்தகப் பற்றாக்குறையானது குறிப்பிடத்தக்களவில் விரிவடைந்தது. 2017 யூனுடன் ஒப்பிடும் போது மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் குறைவடைந்த போதிலும் ஆண்டின் ஆரம்பத்தில் அவதானிக்கப்பட்ட வளர்ச்சிப் போக்கின்படி 2018 யூனில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. சென்மதி நிலுவையின் நிதிக் கணக்கானது பன்னாட்டு நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாவது தொகுதி மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுக முதலீட்டின் மீள்பெறுகையின் மூன்றாவது தொகுதி என்பவற்றினால் துணையளிக்கப்பட்ட போதிலும் அரசாங்கப் பிணையங்கள் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகளின் வெளிப்பாய்ச்சல்கள் மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் இரண்டாந்தரச் சந்தை நடவடிக்கைகள் போன்றன சென்மதி நிலுவையின் மீது சில அழுத்தங்களைப் பிரயோகித்தன.

2018 யூலையில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைந்த அடிப்படை மற்றும் உணவல்லா வகைப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பினால் பிரதானமாக தூண்டப்பட்டு ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 3.4 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 யூனின் 5.3 சதவீதத்திலிருந்து 2018 யூலையில் 5.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 

​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதன முதலீடு தொடர்பான தௌிவுபடுத்தல்

அண்மைக்கால ஊடக அறிக்கைகள் மற்றும் ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தாய்க் கம்பனியான ஈஸ்ட் வெஸ்ட் புறப்பட்டீஸ் பிஎல்சியினால் கொழும்பு பங்குச் சந்தைக்கான கம்பனி வௌிப்படுத்தல்கள் மீது இலங்கை மத்திய வங்கியின் அவதானம் வேண்டப்படுகின்றது.

ஊழிய சேம நிதியத் திணைக்களமானது ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் பங்குகளை எச்பிஎல் புறப்பட்டீஸ் குழுமத்திற்கு விற்பனை செய்வதற்கு ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் தலைவரினால் அனுப்பப்பட்ட கடிதத்தை 2018 யூன் மாதத்தில் பெற்றுக்கொண்டது. தொடா்ச்சியாக ஊழிய சேம நிதியமானது இது தொடா்பாக பல கலந்துரையாடல்களை வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெடுடன் நடாத்தியது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது ​வெலிகம ஹோட்டல் புறப்பட்டீஸ் லிமிடெட்டின் பங்குகளில் ஊழிய சேம நிதியத்தின் பங்குரிமை மூலதனம் தொடா்பான மதிப்பீடொன்றினைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்ததுடன் அம்மதிப்பீட்டுச் செயன்முறைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வங்கியொன்றின் பணிப்பாளர் உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் (கரிசனைக்குரிய) நிறுவனமொன்றிற்கு கடன் வழங்குதல் தொடர்பான தெளிவுபடுத்தல்

கடந்த அண்மைக் காலத்தில் அச்சிடப்பட்ட மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எழுப்பப்பட்ட கரிசனைகளைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியானது, உரிமம் பெற்ற வங்கியொன்றின் (வங்கி) பணிப்பாளரொருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உரித்தாண்மையைக் கொண்டிருக்கும் நிறுவனம் அல்லது நபருக்கு கடன் வழங்குதல் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை நடைமுறைகளைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

Pages

சந்தை அறிவிப்புகள்