Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

மேற்குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் 2019.02.13 அன்று வெளியிடப்பட்ட கட்டுரையுடன் தொடர்புடையது. 

மேற்குறித்த கட்டுரையின் உள்ளடக்கங்களில் பல பிழையான மற்றும் தவறாக வழிநடாத்துகின்ற தகவல்கள் காணப்பட்டன என்பதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புக்களை பின்வருமாறு குறிப்பிட விரும்புகின்றது.

த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்படும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டின் குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. எனவே, தற்போதைய நிலைமையினைத் தொடர்வது கம்பனியின் வைப்பாளர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் நலன்களுக்கு மேலும் கெடுதல் ஏற்படுத்துவதாகவிருக்கும். 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனங்கள், துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச் சொத்துக்களின் விற்பனை 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் அதன் துணை நிறுவனங்கள் துணை-துணை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டுச்  சொத்துக்களை விற்பனை செய்தமை பற்றியும் அது தொடர்பில் மத்திய வங்கியின் ஈடுபாடு பற்றியும் பரப்பப்படும் சில தவறான தகவல்களைப் பற்றியும் இலங்கை மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குறிப்பிட்ட கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பின்வருவன பற்றித் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

கொடுப்பனவு அட்டை கொடுக்கல்வாங்கல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்

தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நிதியினை களவாடல் செய்யும்பொருட்டு தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை வாசிக்கும் பொறிகள் என்பன குற்றங்கள் இழைப்போரினால் தவறாக உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக்கொள்வதற்காக இலத்திரனியல் சிப்பினை (ஈஎம்வி) உள்ளடக்கியதும் இலத்திரனியல் பரிமாற்றல்களுக்கான குறுஞ்செய்தித் தகவல் வழங்குவதுமான அதிக பாதுகாப்புடைய கொடுப்பனவு அட்டைகளை வழங்குதல் போன்ற பன்னாட்டுக் கொடுப்பனவு அட்டை பாதுகாப்பு நியமங்கள் மற்றும் மிகச்சிறந்த நடைமுறைகளை இலங்கையின் தன்னியக்கக்கூற்றுப் பொறிகள் மற்றும் கொடுப்பனவு அட்டை வலையமைப்பு உள்ளடக்கியுள்ளது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 நவெம்பர்

இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தொடர்ந்து 2018 நவெம்பரில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை (ஆண்டுக்காண்டு) குறிப்பிடத்தக்களவிற்கு சுருக்கமடைந்தது. 

2018 நவெம்பரில் (ஆண்டுக்காண்டு) ஏற்றுமதிகள் 4.1 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில் இறக்குமதிகள் 9.1 சதவீதத்தினால் சுருக்கமடைந்தன.

சுற்றுலா பருவகாலம் ஆரம்பமாகியதுடன் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் மீண்டும் வலுவடைந்து நவெம்பரில் 18.2 சதவீதம் கொண்ட (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியைப் பதிவுசெய்தன. சுற்றுலாத்துறை 2019ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக உத்வேகம் மிக்க செயலாற்றத்தினைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளில் வெளிநாட்டு முதலீட்டின் ஆரம்ப மட்டம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளில் வெளிநாட்டு முதலீட்டின் ஆரம்ப மட்டத்தினை, 2019.01.18ஆம் திகதியிலிருந்து திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் மொத்த வெளிநின்ற இருப்பினை 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

Pages

சந்தை அறிவிப்புகள்