Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 மே

2019 மேயில் வெளிநாட்டுத் துறை, வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட சுருக்கத்தின் உதவியுடன் ஒப்பீட்டு ரீதியில் உறுதியானதாக விளங்கியது. 

2019 மேயில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 மேயின் ஐ.அ.டொலர் 933 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 823 மில்லியனுக்கு குறுக்கமடைந்தது. 

2019 மேயில் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு, இறக்குமதிச் செலவினம் 3.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையும் (ஆண்டுக்கு ஆண்டு) ஏற்றுமதி வருவாய்கள் 4.0 சதவீதத்தினால் (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்தமையும் காரணங்களாக விளங்கின. 

மேயில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 70.8 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்து (ஆண்டுக்கு ஆண்டு) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. எனினும், 2019 மே உடன் ஒப்பிடுகையில் யூனில் சுற்றுலாப் பயணிகளினது வருகைகளின் எண்ணிக்கை பெரும்பாலும் இருமடங்காகியதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2019 யூன்

2019 யூனில் தயாரிப்பு நடவடிக்கைகள் 53.9 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்து உயர்வான வீதமொன்றில் விரிவடைந்தன. இது 2019 மேயுடன் ஒப்பிடுகையில் 3.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் இவ்விரிவாக்கத்திற்கு தொழில்நிலையில் விசேடமாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் உணரப்பட்ட குறைந்த தொழில்நிலை கிடைக்கப்பெறும் நிலையிலிருந்து உணவு மற்றும் குடிபானம் மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்க மீட்சி முக்கிய காரணமாக அமைந்திருந்தது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் குறிப்பாக, உணவு மற்றும் குடிபானங்கள் துறை தயாரிப்பில் விரிவுபடுத்தலும் 2019 யூனில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மேம்படுவதற்கு பங்களித்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்கத்தல்களினால் ஏற்பட்ட இடைத்தடங்கல்களுக்குப் பின்னர் பொருளாதார நடவடிக்கைகளின் சுமுகமடைதலுடன் புதிய கட்டளைகளும் உற்பத்தியும் யூனில் பாரியளவில் மீட்சியடைந்துள்ளன என அநேக பதிலிறுத்துநர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர். 

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.4 - 2019

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 யூலை 11ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.50 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்துள்ளது. சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து இம்முடிவிற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது பணவீக்கத்தினை விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் பேணுவதனுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்ட வேளையில் பொருளாதார வளர்ச்சி நடுத்தர காலப்பகுதியில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு ஆதரவளிப்பதாகவும் காணப்பட்டது.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2019 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.

 

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ஐ.அ.டொலர் 2.0 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குகிறது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் (இலங்கை) சார்பில் 2019 யூன் 24ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 500 மில்லியனையும் நீண்ட 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.5 பில்லியனையும் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை ('முறிகள்") வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 யூன் 28ஆம் நாள் மற்றும் 2030 மாச்சு 28ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள், மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் முறையே 'B2’, 'B'  மற்றும் 'B' இல் தரமிடப்பட்டுள்ளன.

இலங்கை அதன் தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறது

இலங்கை மத்திய வங்கி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டுடன் இணைந்து தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்ததன் மூலம் நாட்டின் கொடுப்பனவுத் தோற்றப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல் கல்லொன்றினை அடைந்திருக்கிறது. தேசிய அட்டைத் திட்டமானது, பன்னாட்டு கொடுப்பனவு அட்டைத் தொழிற்பாட்டாளரான ஜேசிபி யப்பான் இன்ரநஷனலின் பங்கேற்புடன் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் தொழிற்படுத்தப்படும். ஆரம்பத்தில், இவ்வட்டைத் திட்டத்தின் கீழ் பற்று அட்டை வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக, காசு மீள பெறுகைகளுக்கு வசதியளிப்பதற்காக, லங்காபே வலையமைப்புடன் நாடளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ள 4,800 இற்கு மேற்பட்ட தன்னியக்கக்கூற்றுப் பொறிகளில் தேசிய அட்டைத் திட்ட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும். 

Pages

சந்தை அறிவிப்புகள்