இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் மேலதிக இழப்பீட்டுக் கொடுப்பனவானது 2021.05.10 ஆம் திகதியில் இருந்து தொடங்கும் என ஸ்வர்ணமஹால் பினான்ஸியல் சேர்விசர்ஸ் பி.எல்.சியின் தகைமையுடைய வைப்பாளர்களுக்கு/ சட்டரீதியான பயன்பெறுநர்களுக்கு இலங்கை மத்திய வங்கி தெரிவிக்க விரும்புகிறது. அதற்கிணங்க, உரிய வைப்புக்களின் தகைமையுடைய வைப்பாளர்கள்/ தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் 2021.05.10 ஆம் திகதி தொடக்கம் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் வங்கி கிளையிலிருந்தும் தங்கள் உரிமைகோரல்களை பெற்றுக்கொள்ள முடியும். மக்கள் வங்கி வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும், சுகாதார வழிகாட்டுதல்களுடன் கண்டிப்பாக இணங்கிச் செயற்படுமாறும் தகைமையுடைய வைப்பாளர்கள்/ தொடர்புடைய சட்டரீதியான பயன்பெறுநர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
















