நாட்டிற்கான வெளிநாடடு; செலாவணி உட்பாய்ச்சல்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட்ட தற்போதைய கொள்கை வழிமுறைகளின் ஒரு பகுதியாக மான்புமிகு நிதியமைச்சர் பின்வருவனவற்றை கொண்டிருக்கும் 2016 ஏப்பிறல் 01ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 1960/66 கொண்ட வர்த்தமானி அறிவித்தலை (அதிவிசேட) வெளியிட்டிருக்கின்றார்.
- 1993 மாச்சு 26ஆம் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 759/15 இல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வழங்கப்பட்ட விலக்கானது இரத்துச் செய்யப்படுகின்றது.
- 2016 ஏப்பிறல் 01ஆம் திகதியிலுள்ளவாறு வெளிநாடடி;ல் வைத்திருக்கப்படும் அத்தகைய ஏதேனும் கொடுப்பனவினை 2016 மே 01ஆம் திகதிக்குப் பிந்தாமல் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவைப்படுத்தப்படுகின்றது.
- 2016 ஏப்பிறல் 01ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பினன்ர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏதேனும் அத்தகைய கொடுப்பனவினை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்குத் தேவைப்படுத்தப்படுகின்றது.
இப்பெறுகைகள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்றின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவிலுள்ள ஏற்றுமதியாளரின் பெயரில் பேணப்படும் எந்தவொரு வெளிநாட்டு நாணய கணக்கிற்கும் வரவு வைக்கப்படலாம் அல்லது உரிமம்பெற்ற வர்த்தக வங்கியொன்றுக்கு விற்கப்படலாம்.
Published Date:
Friday, April 22, 2016