இலங்கை கொள்வனவு முகாமையாளர் அளவீடு - 2016 நவெம்பர்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 நவெம்பரில் 58.4ஆக விளங்கி 2016 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் 1.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பினைக் கொண்டிருந்தமையின் மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் நவெம்பரில் விரிவடைந்தமையினை எடுத்துக் காட்டியது. இதற்கு இம்மாதகாலப்பகுதியில் விரிவடைந்த தொழில்நிலை மற்றும் உற்பத்தித் துணைச் சுட்டெண்களில் ஏற்பட்ட உயர்ந்தளவு வேகமே முக்கிய காரணமாகும். இம்மாத காலப்பகுதியில் புதிய கட்டளைகள் துணைச்சுட்டெண்ணும் அதிகரித்தது. நவெம்பரில் கொள்வனவுகள் இருப்புத்துணைச் சுட்டெண் வீழ்ச்சியடைந்து வரவிருக்கும் பண்டிகைக்காக இருப்புக்கள் பயன்படுதத்ப்படுகின்றமையை எடுத்துக்காட்டிய வேளையில் நிரம்பலின் வழங்கல் நேரம் நீண்டுகாணப்பட்டது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவடைந்த விடத்து மற்றைய அனைத்துத் துணைச்சுட்டெண்களும் சமநிலையான 50.0 அடிமட்டத்திறகு; மேலேயே காணப்பட்டன. அடுத்த மூன்றுமாதங்களுக்கான நடடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் முன்னேற்ற மொன்றினை எடுத்துக் காட்டின. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 ஒத்தோபரின் 59.3 சுட்டெண் புள்ளிகளிலிருந்து நவெம்பரில் 59.7 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தன. கடந்த மாதத்தின் பெறுமதியினைவிட கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்களில் ஏற்பட்ட அதிரிப்பானது, பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 நவெம்பரில் தொடர்ச்சியாக விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்களில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு தொழில்நிலை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கான நடவடிக்கை துணைச் சுட்டெண்களுக்கான என்பனவற்றில் ஏற்பட்ட விரிவாக்கம் தூண்டுதலாக அமைந்தன. புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைத் துணைச் சுட்டெண்கள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2016 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தன. எனினும் நவெம்பரில் நிலுவையிலுள்ள பணிகள் துணைச்சுட்டெண் 2016 ஒத்தோபரிலும் பார்க்க மெதுவான வேகத்தில் வீழ்ச்சியடைந்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் தொகுப்புச் செயன்முறையை பரிசலீனைக்கு எடுக்கப்படாத விலைகள் கட்டளை சுட்டெண் 2016 நவெம்பரில் உயர்ந்த வீதத்தில் அதிகரித்தது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, December 15, 2016