இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரித்தல் மற்றும் பணிகள்) - 2026 பெப்புருவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 பெப்புருவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.

தயாரிப்பிற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 பெப்புருவரியில் 56.8  சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. அனைத்து துணைச் சுட்டெண்களும் இவ்விரிவடைதலுக்குச் சாதகமாகப் பங்களித்தன.

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 பெப்புருவரியில் 54.4 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. 

முழுவடிவம்

 

Published Date: 

Monday, March 16, 2026