ஆளுநரின் கருத்துரை தொடர்பான தவறான ஊடக அறிக்கைகள் தொடர்பாக மத்திய வங்கி தெளிவுபடுத்துகின்றது.

2017ஆம் ஆண்டில் அதிகரித்த பணவீக்கத்திற்கான காரணமாக பெறுமதிசேர் வரியிலான சீராக்கங்களை ஊடக அறிக்கைகள் கோடிட்டுக் காட்டியுள்ளதனை இலங்கை மத்திய வங்கி அவதானித்துள்ளது. 

 இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நாணயக் கொள்கை மீளாய்வு 2017 இலக்கம் 6 இற்கான பத்திரிகை மாநாட்டில் 2017இன் பணவீக்க அதிகரிப்புத் தொடர்பாக ஊடகங்களால் எழுப்பப்பட்ட வினாவிற்காக ஆளுநரால் வழங்கப்படட் பதில் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்துவதற்கு முனைந்துளள்து. அரசாங்கத்தின் வரி அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களிற்கு மேலதிகமாக வானிலை தொடர்பான நிரம்பல் பக்கக் குழப்பங்களின் பாதகமான தாக்கம் உயர்வடைந்து வரும் பன்னாட்டுப் பண்டங்களின் விலைகள் மற்றும் அடிப்படைத் தாக்கம் போன்றவை 2017இன் இற்றைவரையிலான காலப்பகுதியில் பணவீக்கம் உயாவ் டைவதற்கு பங்களிப்புச் செய்துள்ளதாக ஆளுநர் அவரின் பதிலில் குறிப்பிட்டிருந்தார். மேற்குறிப்பிட்ட காரணிகள் இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டினை மீறியதாகக் காணப்பட்ட போதிலும் 2016இன் ஆரம்பத்திலிருந்து இறுக்கமான நாணயக்கொள்கை நிலைப்பாட்டினை பேணிவருவதன் மூலம் கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்களையும் பாதகமான பணவீக்க எதிர்பார்க்கைகள் கட்டியெழுப்பப்படுவதனையும் இலங்கை மத்திய வங்கி கட்டுப்படுத்தியுள்ளது. 

Published Date: 

Wednesday, September 27, 2017