பன்னாட்டு நாணய நிதியமானது இலங்கை பெற்றுக் கொண்ட மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாவது மீளாய்வினை வெற்றிகரமாக மீளாய்வு செய்து கொண்டமையினைத் தொடர்ந்து சிஎஉ 119.894 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 167.2 மில்லியன்) பெறுமதியான மூன்றாவது தொகுதியினை 2017 யூலை 19ஆம் நாளன்று பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது, சென்மதி நிலுவைக்கும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் ஆதரவளிப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும். மீளாய்வு தொடர்பான நிறைவேற்றுச் சபையின் கலநது;ரையாடலைத் தொடர்ந்து, பாரிய வானிலை தொடர்பான நிகழ்வுகள் மற்றும் உலச் சந்தைத் தளம்பல்களுக்கு மத்தியிலும் இலங்கையின் நிலையான பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் நிலைமையை பன்னாட்டு நாணய நிதியம் பாராட்டியுள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இறைத்திரட்சி வழிமுறைகள், குறிப்பாக பாராளுமன்றத்திற்கு புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் சமர்ப்பித்தல், என்பனவற்றையும் பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. மார்ச்சில் நாணயக் கொள்கையின் இறுக்கமாக்கலை அங்கீகரித்தவேளையில், நிதியாற்றல் வாய்ந்த குறிகாட்டிகளின் உறுதித்தன்மை மற்றும் தொடர்ச்சியான பன்னாட்டு ஒதுக்குத் திரட்டல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செலாவணி வீத நெகிழ்ச்சித்தன்மை தொடர்பான அதிகாரிகளின் ஒப்பிய பொறுப்பைப் பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட அளவீடு ரீதியான செயலாற்ற நிபந்தனைகளை எய்துவதில் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளையும் பன்னாட்டு நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
மூன்றாவது தொகுதியின் பகிர்ந்தளிப்புடன், இலங்கை, விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மொத்தமாக ஐ.அ.டொலர் 501.5 மில்லியனை இதுவரை பெற்றிருக்கிறது. தொடர்ச்சியாகக் கிடைத்துவரும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது வெளிநாட்டுத் துறையின் தாக்குப்பிடிகக்க்கூடிய தன்மையினை வலுப்படுத்தவும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்தவும் நாட்டிற்கு உதவும் என்பதுடன், சந்தையின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வேளையில், அதன் மூலம் நடுத்தர கால வளாச்சி வேகத்தினை எய்துவதற்கும் உதவுகிறது.