கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 செத்தெம்பரில் எதிர்மறையான புலத்திற்குச் சென்றுள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2015  தொடக்கம் முதன் முறையாக 2024 செத்தெம்பரில் 0.5 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்து எதிர்மறையான புலத்தினுள் நுழைந்தது.

உணவு வகையானது 2024 ஓகத்தின் 0.8 சதவீதம் கொண்ட பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 செத்தெம்பரில் 0.3 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது. மேலும், உணவல்லா வகையும் 2024 ஓகத்தின் 0.4 சதவீதம் கொண்ட பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் 2024 செத்தெம்பரில் 0.5 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.  

முழுவடிவம்

 

Published Date: 

Monday, September 30, 2024