கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 யூனில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன

தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 யூனில் 56.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றை எடுத்துக்காட்டியது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் மாத காலப்பகுதியில் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டன. 

புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி என்பவற்றில் விரிவடைதலுக்கு உணவு மற்றும் குடிபான துறையின் தயாரிப்பில் வளர்ச்சி பிரதான காரணமாக அமைந்தது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி என்பவற்றில் அதிகரிப்பிற்கு இசைவாக கொள்வனவுகளின் இருப்பும் விரிவடைந்தது. எனினும், வெற்றிடமான பதவிகளை மீள்நிரப்புவது பற்றி நிறுவனங்கள் இன்னும் எச்சரிக்கையுடன் காணப்படுவதால் தொழில்நிலை மாதகாலப்பகுதியில் சுருக்கமடைந்து காணப்பட்டது. அதேவேளை, பிரதானமாக முக்கிய கப்பற் துறைமுகங்களில் நெருக்கடி காரணமாக நிரம்பலர் விநியோக நேரம் யூனில் மேலும் நீட்சியடைந்தது. 

முழுவடிவம்

Published Date: 

Monday, July 15, 2024