கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2024 யூனில் உயர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மேயின் 0.9 சதவீதத்திலிருந்து 2024 யூனில் 1.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வுயர்வடைதலானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது. இவ்வதிகரிப்புடனும் கூட பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கிற்கு நன்கு கீழ் காண்ப்படுகின்றது.

உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2024 மேயின் 0.0 சதவீதத்திலிருந்து 2024 யூனில் 1.4 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2024 மேயின் 1.3 சதவீதத்திலிருந்து 2024 யூனில் 1.8 சதவீதமாக உயர்வடைந்தது. மாதத்திற்கு மாதம் அடிப்படையில் பணவீக்கமானது தொடர்ச்சியாக 3 மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் சிறிதளவு அதிகரித்தது. இதற்கமைய, கொ.நு.வி.சுட்டெண்ணெனின் மாதாந்த சதவீத அதிகரிப்பு 2024 யூனில் 0.77 சதவீதமாகவிருந்தது. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கப் போக்குகளைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2024 மேயின் 3.5 சதவீதத்திலிருந்து 2024 யூனில் 4.4 சதவீதத்திற்கு உயர்வடைந்தது.   
கிடைக்கப் பெறுகின்ற தரவுகளின் அடிப்படையில், அண்மைய காலத்தில் பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட இலக்கிற்கு கீழ் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பணவீக்கமானது, நடுத்தர காலத்தில், பொருத்தமான கொள்கை தலையீடுகளின் மூலம் துணையளிக்கப்பட்டு, இலக்கிடப்பட்ட மட்டத்துடன் அணிசேர்ந்தும் அண்மித்தும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Friday, June 28, 2024