கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - 2024 மே

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 மேயில் 54.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் மேம்படுதலை எடுத்துக்காட்டியது. முன்னைய மாதத்தின் நீண்ட விடுமுறை நாட்களுக்குப் பின்னர் பல கட்டடவாக்க செயற்றிட்டங்கள் மேயில் வழமைக்கு திரும்பின. எவ்வாறாயினும், நிலவிய பாதகமான வானிலை நிலைமைகள் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுதலை தடைபடுத்தின என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

புதிய கட்டளைகள், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மேயில் சிறிதளவு அதிகரித்தன. அளவீட்டில் பங்கேற்றவர்கள் குறிப்பிடுவதற்கமைய, வீதி கட்டடவாக்க செயற்றிட்டங்களே தற்போது அநேகமாக கிடைக்கத்தக்க விலைக்கோரல்களாகக் காணப்படுகின்றன. கட்டடவாக்க தொழிற்றுறையை தூண்டுவதற்கு பாரிய உட்கட்டமைப்பு செயற்றிட்டங்களின் அவசியத்தை அவர்களில் அநேகமானோர் வலியுறுத்தினர். அதேவேளை, ஆட்சேர்ப்புத் தொடர்பில் நிறுவனங்கள் அவதானத்துடன் காணப்பட்டமையினால், மேயில் தொழில்நிலை குறைவான வேகத்திலேனும் தொடர்ச்சியாக சுருக்கமடைந்தது. மேலும், கொள்வனவுகளின் அளவு முன்னைய மாதத்தில்  காணப்பட்டதைப் போன்று அதேமட்டத்தில் காணப்பட்டது. கட்டவாக்கம் தொடர்புபட்ட பொருட்களின் விலை மட்டங்கள் தொடர்ச்சியாக மாத காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்ததென பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். இது, கைத்தொழில் துறைக்கு ஆக்கபூர்வமானதாகக் காணப்படுகின்றது. அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் மே மாதத்திலும் நீட்சியடைந்து காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, June 28, 2024