இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 ஏப்பிறல்

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பருவகால மாதிரியினை பின் பற்றி ஏப்பிறல் மாதத்தில் 41.8 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன், இது, மாச்சு மாதத்துடன் ஒப்பிடுகையில் 24.7 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது 2017 ஏப்பிறலில் தயாரிப்பு நடவடிக்கைகள் சுருக்கமடைந்தமையினை குறித்து காட்டியதுடன் 2017 மாச்சில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட குறைவே பெரிதும் காரணமாக அமைந்தன. மேலும், அளவீட்டு பதிலிறுப்பாளர்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு ஏப்பிறலின் புத்தாண்டு விடுமுறைகளும் தயாரிப்பு நடவடிக்கைகளின் இந்த பருவகால நடவடிக்கைகளில் காணப்பட்ட குறைவுக்கு பங்களிப்பு செய்தன. மேலும், கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன. மேலும், நிரமப்லர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் ஏனைய அனைத்து துணைச்சுட்டெண்களும் 2017 ஏப்பிறலில்  நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு கீழாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டன. எனினும், நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு மேம்பாடொன்றினை எடுத்துக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 மாச்சின் 60.8 சுட்டெண் புள்ளியிலிருந்து ஏப்பிறல் மாதத்தில் 54.2 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. கடந்த மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவானது பணிகள் துறையில் பொருளாதார நடவடிக்கைகள் 2017 மாச்சுடன் ஒப்பிடுகையில் ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் துறையின் மெதுவான போக்கானது (மெதுவான விரிவு) புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள் போன்றவற்றினால் ஆதரவளிக்கப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் தொழில்நிலை 2017 மாச்சுடன் ஒப்பிடுகையில் ஏப்பிறலில் குறைவடைந்து காணப்பட்டது. தொழில்நிலை துணைச்சுட்டெண் 2015 மேயிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் அளவீட்டில் முதன்முறையாக 50.0 அடிமட்டத்திற்கு கீழான பெறுமதியை பதிவு செய்ததுடன், இதற்கு புதிய ஆட்சேர்த்தலில் காணப்பட்ட தாமதமே பிரதான காரணமாக அமைந்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் தொகுப்பு செயன்முறையில் பரிசீலனைக்கெடுக்கப்படாத விதிக்கப்பட்ட விலைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 ஏப்பிறலில்; மெதுவான வேகத்தில் அதிகரித்திருந்தது. தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புக்கள் சுட்டெண் மூலம் அளவிடப்படும் எதிர்கால தொழிலாளர் செலவு 2017 ஏப்பிறல் மாதத்தில்; தொடர்ச்சியாக அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, May 16, 2017