பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் தொடர்பான இரண்டாவது தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு வெளியிடுகிறது

அரச மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் நடாத்தப்பட்ட மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதி நிதியளித்தல் தொடர்பான 2021/2022ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இடர்நேர்வு மதிப்பீட்டின் மட்டுப்படுத்தப்பட்ட விடய அறிக்கையை இலங்கை வெளியிட்டது. இம்மதிப்பீடானது நாட்டிலுள்ள பணம் தூயதாக்கல்ஃபயங்கரவாதிக்கு நிதியளித்தல் இடர்நேர்வுகளை இனங்காண்பதை இலக்காகக் கொண்டது. இலங்கை எதிர்கொண்ட மிகவும் குறிப்பிடத்தக்க பணம் தூயதாக்கல்/பயங்கரவாதிக்கு நிதியளித்தல் அச்சுறுத்தல்கள், பாதிக்கப்படும் தன்மைகள் மற்றும் இடர்நேர்வுகளை இம்மதிப்பீடு எடுத்துக்காட்டுகின்றது. 

போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான வரும்படிகளின் பணம் தூயதாக்கல உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய குற்றங்கள் என்பவற்றை மிகவும் அதிகம் பரவியுள்ள பாரிய குற்றக்கூறுகளாக தேசிய இடர்நேர்வு மதிப்பீடு இனங்கண்டுள்ளது. இவற்றுள், பணம் தூயதாக்கல் தொடர்பான அச்சுறுத்தல் நடுத்தர குறைந்தளவாக மதிப்பிடப்பட்டது. மோசடி, கொள்ளை, சூழல்சார்ந்த மற்றும் இயற்கை மூலவளங்கள்சார்ந்த குற்றங்கள் என்பன நடுத்தரளவிலான பணம் தூயதாக்கல் அச்சுறுத்தலைக் கொண்டதாகப் பதிவுசெய்யப்பட்டன. ஆட்கடத்தல், வரிக் குற்றங்கள், சட்ட விரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத கடற்றொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகள் ஆகியவை பணம் தூயதாக்கல் இடர்நேர்வை கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்ட அதேவேளை நாணயம் போலிபுனைதலுக்கான குறைந்தளவான பணம் தூயதாக்கல் நடுத்தர குறைவான அச்சுறுத்தலாக அவதானிக்கப்பட்டது. 

முழுவடிவம்

Published Date: 

Thursday, September 14, 2023