பிம்புத் பினான்ஸ் பிஎல்சி 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமத்தினை இரத்துச் செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கப்பட்ட நிதிக் கம்பனியான பிம்புத் பினான்ஸ் பிஎல்சி நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டின் ஒட்டுமொத்த குறிக்கோளையும் அடையும் நோக்குடன் விடுக்கப்பட்டுள்ள பல்வேறு பணிப்புரைகளையும் விதிகளையும் அத்துடன் கம்பனியின் நெருக்கடியான  நிதியியல் நிலைமையைத் தீர்க்கும் பொருட்டு பிம்புத் பினான்ஸ் பிஎல்சிக்கு விடுக்கப்பட்ட குறிப்பான பணிப்புரைகளையும் தொடர்ச்சியாக மீறி வருகின்றதுஃ முரணாக இயங்கியுள்ளது. இதன்விளைவாக, பற்றாக்குறையான மூலதன மட்டம், மோசமான சொத்துத் தரம், மற்றும் தொடர்ச்சியான இழப்புக்கள் என்பவற்றின் காரணமாக பிம்புத் பினான்ஸ் பிஎல்சியின் நிதியியல் நிலைமையும் சீர்குலைந்துள்ளன.

நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அச்சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் விதிகள் என்பவற்றுடனும் இணங்கியொழுகுவதற்கும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் ஒன்றுதிரட்டலுக்கான முதன்மைத் திட்டத்தை (முதன்மைத் திட்டம்) கடைப்பிடிப்பதற்கும் பிம்புத் பினான்ஸ் பிஎல்சிக்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் (நாணயச் சபை) பல தடவைகள் கால நீடிப்புக்கள் வழங்கப்பட்ட போதிலும், பிம்புத் பினான்ஸ் பிஎல்சி எதிர்கொண்ட நெருக்கடி நிலைமைகளை மீட்பதற்கு திருப்திகரமான முன்னேற்றம் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

மேலே குறிப்பிடப்பட்டவற்றை நோக்காகக்கொண்டு,  நாணயச் சபையானது நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதி வியாபாரத்தினை கொண்டு நடாத்துவதற்கு பிம்புத் பினான்ஸ் பிஎல்சிக்கு வழங்கியிருந்த உரிமத்தினை 2023.09.01 அன்று நடைமுறைக்கு வரும் விதத்தில் இரத்துச்செய்வதற்கு  தீர்மானித்தது. இதற்கமைய, அத்திகதியிலிருந்து நிதித் தொழிலில் ஈடுபடுவதற்கு பிம்புத் பினான்ஸ் பிஎல்சி அனுமதிக்கப்படவில்லை.

விடுக்கப்பட்ட நாணயச் சபை பணிப்புரைகளுடன் பெருமளவில் இணங்கியொழுகும் விதத்தில், பிம்புத் பினான்ஸ் பிஎல்சியானது 2022ஆம் ஆண்டுக் காலப்பகுதயில் அதன் வைப்புப் பொறுப்புக்களின் பெருமளவான பகுதியை திருப்பிச் செலுத்துவதற்கு இயலுமாகவிருந்தது என்பதுடன் பிம்புத் பினான்ஸ் பிஎல்சியில் கோரப்படாத வைப்பாளர்களுக்கும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகளின்படி உயர்ந்தபட்சம் ரூ. 1,100,000 வரையான தொகையினை இழப்பீடாகச் செலுத்துவதற்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதற்கமைய, அனைத்து தகைமையுடைய வைப்பாளர்களும் உரிமம் இரத்துச்செய்யப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அல்லது தகைமைவாய்ந்த நீதிமன்றம் மூலமான ஒழித்துக்கட்டுனரின் நியமனத்திற்கு முன்னர், எது முதலில் நிகழ்கின்றதோ அதில் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் ஒழுங்குவிதிகளின்படி உரிய கோரல்களை சமர்ப்பிப்பதின் பேரில் தமது வைப்புக்களை முழுமையாக அறவிட்டுக் கொள்ள முடியும்.

மேலும், பிம்புத் பினான்ஸ் பிஎல்சியின் அனைத்து கடன்படுநர்களும் பிம்புத் பினான்ஸ் பிஎல்சிற்கு அவர்கள் செலுத்தவேண்டிய  தொகையினை உரிய நேரத்தில் பிம்புத் பினான்ஸ் பிஎல்சியின் பெயரின் கீழ் உள்ள வங்கிக் கணக்கினூடாக மாத்திரம் செலுத்துமாறும் அத்துடன் அனைத்து அத்தகைய கொடுப்பனவுகளுக்குமான பதிவேடுகளை பேணுமாறும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.

மேலதிக தெளிவுபடுத்தல்களுக்கு, நீங்கள் கீழ்வரும் தொடர்புக;டாக வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தினைத் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி : 0112 477229, 0112 477504
தொலைநகல் : 0112 477 738
மின்னஞ்சல் : snbfi_query@cbsl.lk

Published Date: 

Friday, September 1, 2023