கட்டடவாக்கத் தொழிற்துறைக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் - யூலை 2023

கட்டடவாக்கத் தொழிற்துறை 2023 யூலையில் குறைவடைந்த மட்டத்தில் தொடர்ந்தும் செயலாற்றி 43.2 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுவதற்கமைய,  சவால்மிக்க தொழிற்துறை சூழலுக்கு மத்தியில் அநேகமான நிறுவனங்கள் உறங்குநிலையிலேயே காணப்பட்டன.  எனினும், பொருட்கள் செலவில் படிப்படியான வீழ்ச்சியானது மட்டுப்படுத்தப்பட்ட முன்னெடுக்கப்படும் கருத்திட்டங்களுக்கான ஆக்கபூர்வமான சூழலொன்றினை வழங்கியது. மேலும், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மாதகாலப்பகுதியில் ஓரளவு மீளத்தொடங்கப்பட்டன.

யூலையில் குறைவான வேகமாயினும் புதிய கட்டளைகள் சுருக்கமடைந்தன. வெளிநாட்டு நிதியிடப்பட்ட கருத்திட்டங்களுக்கான விலைக்கோரல் சமர்ப்பிக்கின்ற வாய்ப்புக்கள் அநேகமாக மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற அதேவேளை, தனியார் சேவைநாடிகள் மேலும் செலவு குறைப்புகளுக்காக இன்னும் காத்திருக்கின்றனர் என பல பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர். மேலும், கருத்திட்டங்களை கொண்டிருக்கின்ற நிறுவனங்கள் மேலதிக இயலளவுகளை கொண்டிருப்பதனால் துணை ஒப்பந்த வாய்ப்புகளும் பற்றாக்குறையாக உள்ளன. அதேவேளை, முக்கிய அலுவலர்களை மாத்திரம் தக்கவைப்பதற்காக நிறுவனங்கள் முனைந்தமையினால் மாதகாலப்பகுதியில் தொழில் நிலையானது மேலும் வீழ்ச்சியடைந்தது. மேலும், அநேகமான நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் காணப்படுகின்றமையினாலும் குறுகிய காலத் தேவைப்பாடுகளை மாத்திரம் பூர்த்திசெய்வதனாலும் கொள்வனவுகளின் அளவு மாதகாலப்பகுதியில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, நிரம்பலர் விநியோக நேரமானது மாதகாலப்பகுதியில் உறுதியாகக் காணப்பட்டதுடன் வழங்குநர் கொடுகடன் வசதிகளும் கிடைக்கப்பெறத்தக்கனவாகவுள்ளன என சில பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சி, வட்டி வீதங்கள் மற்றும் பொருட்கள் செலவுகளில் குறைவு அத்துடன் இடைநிறுத்தப்பட்ட அரசாங்க நிதியளித்தல் கருத்திட்டங்களை மீளத்தொடங்குவது பற்றிய தற்போதைய பேச்சுவார்த்தைகள் என்பனவற்றின் பிரதான காரணமாக அடுத்துவரும் மூன்று மாதங்களை நோக்கி நிறுவனங்கள் மத்தியிலான எண்ணப்பாங்கு பரந்தளவில் சாதகமாக காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, August 31, 2023