“இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு – 2021” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படும் தரவுக்கையேடாகிய “ இலங்கையின் சமூக பொருளாதாரத் தரவு – 2021” தற்போது பொதுமக்களின் தகவலுக்காக கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவுக்கையேடு தொடரின் 44வது தொகுதியாகும்.

இக் கையேடானது 14 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதாரக் குறிக்காட்டிகள், நாட்டின் ஒப்பீடுகள், சமூக பொருளாதார நிலைமைகள், மனித வளங்கள், தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விலைகள் மற்றும் கூலிகள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலா, வெளிநாட்டு நிதி, அரச நிதி அத்துடன் பணம், வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களைக் உள்ளடக்கியுள்ளது. இக் கையேடானது, நடைமுறைத் தகவல்களின் சமூகப் பொருளாதார தரவுகளின் பரந்தளவிலான தரவுகளை சுருக்கமான வடிவத்தில் வழங்குவதால், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயன்மிக்க உசாத்துணை மூலமாக அமையும்.

வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தினூடாக (http://www.cbsl.gov.lk) அணுகமுடியும். வெளியீட்டின் அச்சுப் பதிப்பானது சென்றல் பொயின்ட் கட்டடத்தில் (சாதம் வீதி கொழும்பு – 01) அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகக் கருமபீடத்திலும் தொலைபேசி: 011-2444502; சிறி ஜயவர்தன மாவத்தை ராஜகிரியவில் அமைந்துள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையத்திலும் தொலைபேசி:011-2477803; இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலும் (மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை, மற்றும் அநுராதபுரம்) 50.00 ரூபாவிற்கு விற்பனைக்காக விரைவில் கிடைக்கக் கூடியதாகயிருக்கும்.

Published Date: 

Thursday, September 30, 2021