வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 ஏப்பிறல்

2021 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத்துறை கலப்பான செயலாற்றத்தினை வெளிக்காட்டியது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக 2021 ஏப்பிறலில் விரிவடைந்த அதேவேளையில் சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டது. குறிப்பாக, ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2020 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2021 ஏப்பிறலில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருந்தாலும் 2021 மாச்சுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து காணப்பட்டன. இருப்பினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் அதன் உத்வேகத்தைத் தொடர்ந்தும் பேணி 2021 ஏப்பிறலில் குறிப்படத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. அதேவேளையில், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கு இம்மாத காலப்பகுதியில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட கூட்டுக்கடன் வசதிப் பெறுகைகளுடன் வலுவடைந்தது. ஏப்பிறல் மாத நடுப்பகுதியில் சில தளம்பல்கள் அவதானிக்கப்பட்ட போதிலும் இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, June 17, 2021