பிரதேச அலுவலகம் - கிளிநொச்சி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களும்; மூத்த அலுவலகர்களும் இணைந்து நுண்நிதித் துறையில் காணப்படும் பிரச்சனைகளுக்கான பொருத்தமான தீர்வுகளை ஆராய்வதற்காக 2020 செத்தெம்பர்; 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வடமாகாணத்திற்கு வருகை தந்;தனர். இதுதொடர்பில்இ இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் கிளிநொச்சியானது வடக்கிலுள்ள பல்வேறுபட்ட குழுமங்களை சேர்ந்த அக்கறையுடைய தரப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக நிகழ்ச்சி தொடரொன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதன்படி வடமாகாண ஆளுநர் திருமதி. பி. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களுடன் அவரது அலுவலகத்தில் 07 செத்தெம்பர் 2020 அன்று நடைபெற்ற கலந்துரையாடலானது இந்நிகழ்ச்சித் தொடரினை ஆரம்பித்து வைத்தது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அரச அதிபர்கள், உயர் அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், நிதியியல் நிறுவனங்களின் வடமாகாண தலைவர்கள், தெரிவு செய்யப்பட்ட நுண்நிதி நிறுவன தலைவர்கள், கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் குடிசன சமூகப்பிரதிநிதிகள் ஆகியோருடனான பல்வேறுவிதமான கலந்துரையாடல்களானவை 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இதற்கு மேலதிகமாக, இவ் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அவர்களும்; மூத்த அலுவலகர்களும் இணைந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உள்ள வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்கள் இருவரை சந்தித்திருந்தனர் (ரேஸ்ரா இண்ரஸ்ரிஸ், யாழ்ப்பாணம் மற்றும் பொசிபிள் கிறீன் (பிறைவேற்) லிமிட்டெட், கிளிநொச்சி).

 

மேலும் புகைப்படங்களை பாா்க்க

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயமானது, “நிதியியல் அறிவு” எனும் தலைப்பிலான பயிற்றுவிப்பாளர்களுக்கான இணையவழிப் பயிற்சியொன்றை வங்கித்தொழில் கற்கைகள் ஆய்வு நிலையத்துடன் இணைந்து 25 சனவரி 2021 அன்று யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நடாத்தியிருந்தது. யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பல்வேறு பிரதேச செயலகங்களிலிருந்து 94 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இவ் இணையவழிக் கருத்தரங்கில் பங்குபற்றி பயனடைந்திருந்தனர். இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதிப் பணிப்பாளர் முனைவர். இ சிறிதரன் அவர்கள் வளவாளராக பங்களித்திருந்தார்.

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய காரியாலயமானது, ‘வணிகங்கள் மீதான கொவிட் 19 பரவலின் தாக்கமும் கையாளும் வழிமுறைகளும்’ பற்றிய இணையவழிக் கருத்தரங்கொன்றினை 08 சனவரி 2021 அன்று நடாத்தியிருந்தது. இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு திணைக்களத்தைச் சேர்ந்த பிரதி பணிப்பாளர் முனைவர். இ. சிறிதரன் அவர்கள் பங்களித்திருந்தார். இக்கருத்தரங்கில் வணிகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்கள் பங்குபற்றி பயன்பெற்றிருந்தனர் என்பதுடன;;; இது தொடர்பில் ஆர்வமுடையோருக்காக இலங்கை மத்திய வங்கியின் உத்தியோக முகநூல் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்ட காணொலியானது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய கணக்கீட்டு தொகுப்பு எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கானது பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் வங்கித்தொழில் கற்கைளுக்கான ஆய்வுநிலையம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் 18 செத்தெம்பர் 2020 அன்று வடமாகாணத்திலுள்ள உயர்தர பொருளியல் ஆசிரியர்களுக்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. 133 ஆசிரியர்கள் இக்கருத்தரங்கில்  பங்குபற்றியிருந்தனர். இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த பொருளியலாளர் திரு. எம். கேசவராஜா அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

இலங்கையில் கொடுப்பனவுகளின் டிஜிட்டல் எதிர்காலம் எனும் தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கானது கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம் மற்றும் வங்கித்தொழில் கற்கைளுக்கான ஆய்வுநிலையம் ஆகியவற்றின் கூட்டிணைப்புடன் 09 திசெம்பர் 2020 அன்று வடமாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற வர்த்தக மற்றம் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் உத்தியோகத்தர்களுக்கு வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் 80 வங்கியாளர்கள் பங்குபற்றி பயனடைந்துள்ளனர். இக்கருத்தரங்கின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த உதவிப் பணிப்பாளர் திரு. பி. ஜி. ஜி. என். ரூபசிங்க அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

வட மாகாணத்திலுள்ள 30 தெரிவுசெய்யப்பட்ட சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிரதேச அலுவலகத்தினால்  GMP & SLS சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2021 திசெம்பர் 17 அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

Pages